இந்தியா -தென்னாப்பிரிக்கா, 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் தள்ளாடியதால் தென்னாப்பிரிக்கா அணி வலுவான நிலையில் உள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-047

கேப்டவுன்: இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்டர்ஸ் மைதானத்தில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து இந்திய அணி 77 ஓவருக்கு 223 ரன்களும், தென்னாப்பிரிக்கா அணி 76 ஓவருக்கு 210 ரன்களும் எடுத்தது.

மேலும் 13 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 17 ஓவருக்கு 2 விக்கெட் இழந்து 57 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்று (ஜனவரி:13) இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியின் சத்தீஸ்வர் புஜாரா – விராட் கோலி ஜோடியில் புஜாரா 9(33) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜென்சன் வீசிய பந்தில் பீட்டர்சன்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ரஹானே 1(9) ரன்னுடன் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 44வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. 

இதைத்தொடர்ந்து களத்தில் இருந்த விராட் கோலி நெகிடி வீசிய 48வது ஓவரின் 2வது பந்தில் 4 பவுண்டரி உட்பட 29 (143) ரன்கள் எடுத்தபோது எய்டன் மார்க்கரமின் கேட்ச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஆறாவதாக களமிறங்கிய விக்கெட்டு கீப்பர் ரிஷப் பண்ட் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 100 (139) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். இதில் அஷ்வின் 7(15), ஷர்தூல் தாகூர்5(13), முகமது ஷமி 0(10), உமேஷ் யாதவ் 0(10), பும்ரா 2(5) ஆகியோர் பெரிய ஸ்கோர் எதுவும் எடுக்காமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 67 ஓவர்கள் முடிவில் 198 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது.

இதில் தென்னாப்பிரிக்கா சார்பாக மார்க்கோ ஜென்சன் 4 விக்கெட்டையும், நெகிடி மற்றும் ரபாடா தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டி எல்கர் – மார்க்ரம் களமிறங்கினர். இதில் மார்க்ரம் 16(22) ரன்களில் ஷமி வீசிய பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதைத்தொடர்ந்து பும்ரா பந்துவீச்சில் எல்கர் 30(96) ரன்கள் எடுத்த நிலையில் ரிஷப் பந்த்தின் கேட்ச்சில் ஆட்டமிழந்தார். இதனால் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 29 ஓவருக்கு 2 விக்கெட் இழந்து 101 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இதில் கீகன் பீட்டர்சன் 7 பவுண்டரி உட்பட 48(61) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.