Virat Kohli: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 5 முக்கிய சாதனைகளை படைக்கவிருக்கும் இந்திய அணியின் கேப்டன்…

www.indcricketnews.com-indian-cricket-news-002

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 4-ம் தேதி ஆரம்பமாகிறது .கடந்த முறை 1-4 என தோல்வியடைந்த இந்திய அணி, தற்போது அதற்கு பதிலடி கொடுக்குமென அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

     இந்த நிலையில் விராட் கோலி  வரவிருக்கும் இங்கிலாந்து தொடரில் முக்கியமான ஐந்து சாதனைகளைப் புரியவிருக்கிறார். விராட் கோலி  இதுவரை டெஸ்ட் போட்டியில் 7547 ரன்களை விளாசியுள்ளார்.

இன்னும் 453 ரன்கள் அடித்தால் 8 ஆயிரம் ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையடைவார். தற்போது வரை 92 போட்டிகளில் 27 சதம், 25 அரைசதங்கள் அடித்திருக்கிறார். அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் வரிசையில் ஜஸ்டின் லாங்கர் (7696), இயன் பெல் (7727), மிக்கேல் ஆதர்டன் (7728) ஆகியோரை பின்னுக்கு தள்ள இந்த போட்டி பெரும் வாய்ப்பாகவே அமைகிறது.

இங்கிலாந்துக்கு எதிராக 211 ரன்கள் அடித்தால், அந்த அணிக்கு எதிராக 2000 ரன்கள் அடித்த வீரர் என்ற மற்றொரு புதிய சாதனையும் படைக்கவிருக்கிறார். டிராவிட் 1950 ரன்கள் அடித்துள்ள நிலையில் அலஸ்டைர் குக் (இந்தியாவுக்கு எதிராக), சச்சின் தெண்டுல்கரின் சாதனையுடன் இணைவார்.

சேவாக் டெஸ்ட் போட்டியில் 54 முறை 50 ரன்களுக்கு மேல் சதமடித்துள்ளார். விராட் கோலி 10 இன்னிங்சில் 3 அரைசதத்திற்கு மேல் அடித்தால் ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், மற்றும் லட்சுமண் சாதனையுடன் இணைய பல வாய்ப்புகள் உள்ளது.27 சதம் அடித்துள்ள விராட் கோலி மேலும் ஒரு சதம் அடித்தால் ஸ்டீவ் ஸ்மித்தை பின்தள்ளி சாதனை பட்டியலில் முன்னேறுவார்.

இதில் இரண்டு சதம் அடித்தால், ஹசிம் அம்லா, மைக்கேல் கிளார்க்யின் சாதனையை முறியடித்து முன்னேறுவார். விராட் கோலியும், முன்னால்  பிரிட்டிஷ் அணியின் கேப்டன் கிளைவ் லாய்டும் தலா 36 டெஸ்ட் போட்டியில் கேப்டனாக வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் விராட் கோலி கிளைவ் லாய்டு சாதனையை முறியடித்து முதலிடம் வகிப்பார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி வெல்வதனால் 2007-ம் ஆண்டில் டிராவிட் தலைமையிலான  இந்திய அணி தொடரை கடைசியாக கைப்பற்றியது என்பதை இஅணிகள் வர் மாற்றியமைப்பார். கபில்தேவ், அஜித் வடேகர் தலைமையிலான டெஸ்ட் மட்டுமே இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இதுவரை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவையனைத்தும் வரவிருக்கும் டெஸ்ட் தொடரை எதிர்நோக்கியுள்ளது.

Be the first to comment on "Virat Kohli: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 5 முக்கிய சாதனைகளை படைக்கவிருக்கும் இந்திய அணியின் கேப்டன்…"

Leave a comment

Your email address will not be published.


*