நாளை ஐபிஎல் வீரர்கள் ஏலம்: எங்கே? எப்போது?- அணிகள் வைத்திருக்கும் தொகை எவ்வளவு? முழு விவரம் !!!

ipl 2021 auction today
ipl 2021 auction today

ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நாளை நடைபெற இருக்கிறது. இதில் 292 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். . .

உலகளவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் லீக்குகளில் ஐபிஎல் முதன்மையாக விளங்குகிறது. சுமார் 60 நாட்கள் நடைபெறும் இத்தொடரில் விளையாட அனைத்து நாட்டின் வீரர்களும் விரும்புகிறார்கள். வீரர்களுக்கு அதிகமான பணம் கிடைப்பதுடன், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் அனுபவமும் கிடைக்கிறது.

இதனால் நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா. வெஸ்ட் இண்டீஸ் போன்ற கிரிக்கெட் போர்டுகள் வீரர்களை அனுப்புவதில் தடைஏதும் விதிப்பதில்லை.
இந்த வருடம் நடைபெறும் ஏலம் மெகா ஏலம் இல்லை என்றாலும், 292 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். இதில் 164 பேர் இந்திய வீரர்கள் ஆவார்கள். மொத்தம் 1114 வீரர்கள் பதிவு செய்ததில் 292 பேர் இடம் பிடித்துள்ளனர். நாளை சென்னையில் மதியம் 3 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் ஒருவர் வெளிநாட்டு வீரராக இருக்கலாம். கைவசம் 19.90 கோடி ரூபாய் வைத்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 வீரர்களை எடுக்கலாம். இதில் 3 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 13.4 கோடி ரூபாய் வைத்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ் என பெயர் மாற்றம்) 9 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் 5 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 53.20 கோடி ரூபாய் வைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் 2 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். 10.75 கோடி ரூபாய் கைவசம் வைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் 7 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் 4 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 15.35 கோடி ரூபாய் வைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 9 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் 3 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 37.85 கோடி ரூபாய் வைத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 11 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் 3 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 35.40 கோடி ரூபாய் வைத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 3 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் ஒரு வெளிநாட்டு வீரர் அடங்குவார். கைவசம் 10.75 கோடி ரூபாய் வைத்துள்ளது. வீரர்கள் எலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.

Be the first to comment on "நாளை ஐபிஎல் வீரர்கள் ஏலம்: எங்கே? எப்போது?- அணிகள் வைத்திருக்கும் தொகை எவ்வளவு? முழு விவரம் !!!"

Leave a comment

Your email address will not be published.