சென்னையில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி இமாலய வெற்றி – அஸ்வின், பட்டேல் சுழலில் சுருண்டது இங்கிலாந்து

சென்னையில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி இமாலய வெற்றி
சென்னையில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி இமாலய வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 329/10 ரன்கள் குவித்தது. அடுத்துக் களமிறங்கிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு சுருண்ட நிலையில் இந்திய அணி 285/10 ரன்கள் எடுத்து, 482 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. கடின இலக்கை நோக்கி பயணித்த இங்கிலாந்து அணி 164/10 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து, 317 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் கடைசி ஓவரில் பென் ஃபோக்ஸ் 2 (9) ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 33 (84) களத்தில் இருந்த நிலையில் முதல் செஷன் நிறைவடைந்தது. அடுத்துக் களமிறங்கிய ஒல்லி ஸ்டோன் வெறும் 5 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு டக்-அவுட் ஆனார்.

மறுமுனையில் ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஜோ ரூட் 33 (92) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய அணி பௌலர்கள் தொடர்ந்து சிறப்பான முறையில் பந்துவீசினர். இருப்பினும், குல்தீப் யாதவ் வீசிய 51ஆவது ஓவரில் மொயின் அலி ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டினார். தொடர்ந்து ரன் மழை பொழிந்த அவர், 18 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்ததால் போட்டி முடிவுக்கு வந்தது. அறிமுக வீரர் அக்ஷர் படேல் கடைசி இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம், இந்திய அணிக்காக அறிமுக டெஸ்டில் 5 விக்கெட்களை வீழ்த்திய 7ஆவது பந்துவீச்சாளராகத் திகழ்கிறார். இந்நிலையில், என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என தமிழக வீரர் அஸ்வின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த சில நாட்களாக என்னை விரும்பிய அனைவருக்கும் நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

விவி குமார், தோஷி, ஹிர்வானி, அமித் மிஸ்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்கள் முதல் ஆறு இடங்களில் உள்ளனர். முதல் போட்டியை இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில் இரண்டாவது போட்டியை இந்தியா கைப்பற்றி பதிலடி கொடுத்துள்ளது. மூன்றாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்தில் நடைபெறும்.

Be the first to comment on "சென்னையில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி இமாலய வெற்றி – அஸ்வின், பட்டேல் சுழலில் சுருண்டது இங்கிலாந்து"

Leave a comment

Your email address will not be published.


*