நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 சுற்று மோதலில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்குமாறு சுனில் கவாஸ்கர் பரிந்துரைத்துள்ளார்.
சிட்னி :கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று(அக்:23) நடந்துமுடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 சுற்றில் இந்தியா கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்ற நிலையில், இன்று சிட்னியில் நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஆனால் டி20 கிரிக்கெட்டில் இதுவரை நெதர்லாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது கிடையாது. அதனால் நெதர்லாந்து அணி வீரர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பது குறித்து இந்திய வீரர்களுக்கு தெரியாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது போல் தெரிகிறது. எனவே அவருக்கு…