Suryakumar Yadav : இந்தியா Vs இலங்கை அணிக்கும் எதிரான முதல் டி20-ல் இந்தியா அபார வெற்றிபெற்றது.

கொழும்பு: இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தார்கள்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின்  தொடக்க வீரர் பிரித்வி ஷா டக் அவுட்டானார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் தவான் – சஞ்சு சாம்சன் ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் ஸ்கோரை உயர்த்தினர்.

இந்த ஜோடி 2வது விக்கெட்டிற்கு (51) ரன்களை சேர்த்தது. 20    பந்துகளில் (27)  ரன்களை எடுத்த சஞ்சு சாம்சன் அசரங்கா பந்துவீச்சில் அவுட் ஆக்கப்பட்டார். மிகவும் குறைவான ஸ்கோருடன் திணறி வந்த இந்திய அணியை ஷிகர் தவான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி நம்பிக்கையை உருவாக்கினர்.

அதிரடியாக விளையாடிய தவான் (46) ரன்களும் சூர்யகுமார் யாதவ் (50) ரன்களும் எடுத்து ஆட்டமிளந்தனர். கடைசி 5 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தியே ஆக வேண்டும் என்ற சூழலிலும், ஹார்திக் பாண்டியா 12 பந்துகளில் (10) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இஷான் கிஷன் 20 (14), க்ருனால் பாண்டியா 3 (3) ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தனர்.  இறுதியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை சேர்த்தார்கள். 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை  அணிக்கு அதிரடி தொடக்கம் அமைந்தது.

அவிஷிங்கா ஃபெர்னாண்டோ மற்றும் மினோத் பானுகா அதிரடியாக விளையாடினர். எனினும் அவர்களால் முதல் விக்கெட்டிற்கு (23)ரன்கள் மட்டுமே சேர்த்தனர். அவிஷிங்கா (26) ரன்களுக்கும், மினோத் பனுகா (10) ரன்களுக்கும் எடுத்து வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் வந்த வீரர்களில் சாரித்  மட்டும் தான் அதிகபட்சமாக (44) ரன்களை சேர்த்தார்.

தனஞ்செய டி சில்வா (9), அசென் பாண்ட்ரா (9), தசுன் சனகா (16), வானிண்டு ஹசரங்கா (0), சாமிகா (3), இசுரு உதானா (1), துஷ்மந்தா சமீரா (1) என அடுத்தடுத்து மோசமான ரன்களில் சரிந்தனர். இதனால் 18.3 ஓவர்களிலேயே இலங்கை அணி 126 ரன்களுக்கு ஆட்டமிழந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1 -0 என்ற நிலையில் உள்ளது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்கள், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

Be the first to comment on "Suryakumar Yadav : இந்தியா Vs இலங்கை அணிக்கும் எதிரான முதல் டி20-ல் இந்தியா அபார வெற்றிபெற்றது."

Leave a comment

Your email address will not be published.


*