ஸ்ரீசாந்த் உச்சநீதி மன்றத்தில் கூறினார்: போலீசாரின் அசச்சுறுத்தலினால் குற்றத்தை ஒப்புக்கொண்டேன்.

Sreesanth

உச்சநீதி மன்றம் ஸ்ரீசாந்த்த்தின் நடத்தையை கவனித்தது. அவர் கிரிக்கெட் விளையாட்டில் ஆயுள் தடையை எதிர்கொண்டதால் முழு பகுதியும் நல்லதல்ல என்று உச்சநீதி மன்றம் குறிப்பிட்டது. கிரிக்கெட் விளையாட்டில் தடை செய்யப்பட்டுள்ள வேக்கப் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டு சூதாட்ட ஊழல் பிரச்சினையில் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீசாந்த் புதன்கிழமையன்று உச்சநீதி மன்றத்தில் ஒரு கோரிக்கை விடுத்தார். டெல்லி போலீசார் அவருடைய குடும்ப உறுப்பினர்களை அசச்சுறுத்தியதற்கும், மிரட்டியதர்க்கும் அவர் அவருடைய சூதாட்ட ஈடுபாட்டை ஒத்துக்கொண்டதாக சொன்னார்.
உச்சநீதி மன்றம் ஸ்ரீசாந்தை இவ்வாறாக கேள்வி கேட்டது. நீங்கள் ஏன் உடனடியாக இந்த சூதாட்ட ஊழல் விஷயத்தை அதாவது இந்தியன் பிரீமியர் லீக்ன் பொழுது(2013) பிசிசிஐ கவனத்திற்கு கொண்டுவரவில்லை. உச்ச நீதி மன்றம் ஸ்ரீசாந்தின் நடவடிக்கையை பற்றி நன்றாக கவனித்தது. முழு நேர தடையை பற்றியும் இது எல்லா நிகழ்வுகளுக்கும் சரியானது அல்ல என்று உச்ச நீதி மன்றம் குறிப்பிட்டது.

விசாரணை நீதி மன்றம் ஸ்ரீசாந்தை கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டில் மாட்டிக் கொண்டதற்க்காக 2015 ஆம் ஆண்டில் அவரை விடுவித்தது. விசாரணை நீதி மன்றம் நீதிபதிகளான அசோக் பூஷன் மற்றும் K M ஜோசப் அவர்களிடம் இவ்வாறாக சொன்னது. இந்தியாவின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஸ்ரீசந்திற்கு விதித்த முழு நேர விளையாட்டு தடை மிகவும் கடுமையாக உள்ளது என்றும் அவர் மேல் உள்ள குற்றச்சாட்டுக்கு எந்த விதமான ஆதாரங்களும் விவரிக்கப்படவில்லை என்று சொன்னது.
ஸ்ரீசாந்த்தினுடைய வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் நீதி மன்றத்தில் இவ்வாறாக விவரித்தார். போலீசார் ஸ்ரீசாந்தையும் அவருடைய குடும்பத்தாரையும் மிரட்டப்போவதாகவும் கொடுமைப்படுத்த போகதாகவும் சொன்னதற்காக ஸ்ரீசாந்த் அவர் பண்ணாத குற்றத்தை ஒப்புக்கொண்டதாக நீதி மன்றத்தில் சொன்னார்.
முப்பத்தி ஐந்து வயதான ஸ்ரீசாந்த் உச்ச நீதி மன்றத்தில் ஒரு சவால் விட்டார். கேரளாவில் உள்ள பெரிய நீதி மன்றம் இந்த தீர்மானத்தை மற்றும் ஸ்ரீசாந்தின் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை மீட்கும். ஸ்ரீசந்தினுடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இவ்வாறாக விவாதித்தார்.

இந்த குற்றச்ச்சாட்டு சரியாக நிறுவப்படவில்லை என்றும் இந்த விதமான விளையாட்டு சூதாட்டம் இரண்டு அணிகளுக்கும் அதாவது ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப்க்கும் மே 2013 ஆம் ஆண்டில் நடந்த IPL கிரிக்கெட் போட்டியில் நடக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த சூதாட்டத்திற்க்காக எந்த கிரிக்கெட் வீரரும் பணம் வாங்கவில்லை என்றும் அதற்காக எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

உச்சநீதி மன்ற நீதிபதிகள் சூதாட்ட பந்தயக்காரர்களின் தொலைபேசி பதிவுகளை கேட்டபின்னர் இவ்வாறாக ஸ்ரீசாந்த் வழக்கறிஞரிடம் கேட்டார்கள் ஏன் ஸ்ரீசாந்த் இந்த தகவலை உடனடியாக இந்தியா கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்திடம் தெரிவிக்க வில்லை. மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார் ஸ்ரீசாந்த் இந்தியா கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்திடம் இதை பற்றி தெரிவிக்க தவறி விட்டார். என்றும் இப்படி செய்தால் அவருக்கு அதிகபட்சமாக ஐந்து வருட தடை இருந்து இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். நீதிபதிகள் சொன்னார்கள் இது எல்லாமே ஸ்ரீசாந்தின் நடவடிக்கை பற்றியே இருக்கிறது என்றும் அவரது நடவடிக்கை சரியானதாக இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

சல்மான் குர்ஷித் இவ்வாறக வாதிட்டார். ஸ்ரீசாந்த் அந்த ஓவரில் பதினான்கு ரன்களை கொடுத்திருக்க வேண்டும் அனால் அவர் பதிமூன்று ரன்களே கொடுத்தார். அந்த ஓவர் இரண்டு சிறந்த மட்டை விளையாட்டு வீரர்களுக்கு ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ஷான் மார்ஷ்க்கு போடப்பட்டது. ஸ்ரீசாந்த் உச்ச நீதி மன்றத்தில் முன்னாடியே சொல்லி இருந்தார் அவருக்கு ஆங்கிலச் கவுண்டி ஆட்டத்தில் விளையாடுவதற்கு அழைப்பு வந்தது என்றும் அனால் இந்த ஒரு முழுமையான விளையாட்டுத்தடை மிகவும் கடுமையானது என்றார். ஒரே ஒரு நீதிபதியை கொண்ட கேரளா உயர் நீதி மன்றம் அவருக்கான விதிக்கப்பட்டுள்ள முழுத்தடையை விலக்கிக்கொண்டது. மேலும் அவர் மீது விதிக்கப்பட்டுள்ள எல்லா விதமான நடவடிக்கைகளையும் தள்ளி வைத்தது. பிறகு உச்ச நீதி மன்றமும் இந்த தடையை தள்ளி வைத்தது.

Be the first to comment on "ஸ்ரீசாந்த் உச்சநீதி மன்றத்தில் கூறினார்: போலீசாரின் அசச்சுறுத்தலினால் குற்றத்தை ஒப்புக்கொண்டேன்."

Leave a comment

Your email address will not be published.


*