பயிற்சியாளரின் கருத்து: ரிஷப் பந்த்தை, எம் எஸ் தோனியுடன் ஒப்பிடுவது நியாயமற்றது.எம் எஸ் தோனியும் பல வாய்ப்புகளை தவறவிட்டார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டி மொகாலியில் நடந்தது. இந்த போட்டியில் தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக  ரிஷப் பந்த் களம் இறங்கினார். விக்கெட் கீப்பிங்கில் சொதப்பிய ரிஷப் பந்த்தை சமூக ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்தது. ஆனால் ரிஷப் பந்த்தின் பயிற்சியாளர் தரக் சின்ஹா இவரை சிறந்த ஆட்டக்காரரான எம் எஸ் தோனியுடன் சமூக ஊடகங்கள் ஒப்பிடுவது நியாயமற்றதாக இருக்கிறது என்று நம்பினார்.

மொஹாலியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில், இளம் இந்திய அணி வீரரான ரிஷப் பந்திற்கு இது ஒரு குறுகிய கனவாக இருந்தது. இவர் இந்த போட்டியில் விளையாடிய பொழுது விக்கட்டுக்கு பின்னால் மிகவும் கவனக் குறைவாக இருந்தார். இந்த சம்பவத்தின் காரணமாக, கிரிக்கெட் ரசிகர்களின் குற்றசாட்டை பல வழிகளிலும், இவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவர், அஸ்டான் டர்னரின் விக்கெட்டுகளை பரிதாபமாக தவறவிட்டார். அஸ்டான் டர்னர் உட்பட மூன்று பேரின் விக்கெட்டுகளை தவறவிட்டார். இதனால் இந்திய அணி பரிதாபமாக தோற்றது. நேற்று விராட்கோலி தோல்விக்கு விக்கெட் கீப்பிங் மிஸ்ஸிங் ஆனதை குறிப்பிட்டு வேதனை தெரிவித்து இருந்தார். இது போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு அனுகூலமாக மற்றும் ஆட்டத்தை திசை திருப்பியதாகவும் இருந்தது.

இந்த தவறுதலுக்காக சமூக ஊடகங்கள் ரிஷப் பாந்தை மிகவும் கடுமையாக குற்றம் சாட்டியது. ஆனால் ரிஷப் பந்த்தின் பயிற்சியாளர் தரக் சின்ஹா இவரை சிறந்த ஆட்டக்காரரான எம் எஸ் தோனியுடன் சமூக ஊடகங்கள் ஒப்பிடுவது நியாயமற்றதாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

ரிஷப் பாந்த் கிரிக்கெட் ரசிகர்களின் சத்தமான கூச்சலால் மிகப் பெரிய மன அழுத்தத்தில் இருந்தார். மற்றும் மைதானத்தில் இவர் பார்ப்பதற்கு மிகவும் பயந்தவராக காணப்பட்டார். இவர் தோனி மாதிரி விக்கெட்டுகளை நோக்கி பந்தை எறிந்தார். ஆனால், அது எதிர்பாராதவிதமாக கூடுதல் ஓட்டங்களாக ஆஸ்திரேலியா அணிக்கு அமைந்தது.  இது கேப்டன் விராட் கோலிக்கு திருப்தி அளிக்கவில்லை. இதன் காரணமாக, ரிஷப் பாந்தின் பயிற்சியாளரான தரக் சின்ஹா, இந்த இளம் வயது வீரருக்கு இப்படிப்பட்ட தீவிர அழுத்தம் கொடுக்கக்கூடாது என்றார்.

இந்த மாதிரியான ஒப்பீடுகள் தற்சமயம் அதிக அளவில் வளர்ந்து வருகின்றன.  ஏனெனில், தோனி போன்று, ரிஷப் பாந்தும் ஒரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஆவார். ஆனால் இது இவர் மேல் நியாயமற்றதாக இருக்கிறது ஏனென்றால் இது குறிப்பிட்ட வழியில் செய்வதற்கு மற்றும் தோனி போல் இருப்பதற்கு, இவருக்கு தகாத மன அழுத்தத்தை கொடுக்கும். இவருடைய மனம் அமைதியாக இருக்கும்பொழுது மிகவும் நன்றாக செயல்படுவார் என்று இந்த காலத்திற்க்கான பயிற்சியாளர் தரக் சின்ஹா இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்தார்.

மற்றும் சின்ஹா கிரிக்கெட் ரசிகர்களுக்கு இவ்வாறாக நினைவு படுத்தினார். எம் எஸ் தோனி இன்றைய நிலையில் ஆடுவது போல், அவர் இளம் வயதில் சிறப்பாக விளையாடவில்லை என்றும் ரிஷப் பாந்துக்கு ஆட்டத்தில் நிலைப்பதற்கு மற்றும் சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கு கொஞ்சம் நேர அவகாசம் கொடுங்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இந்திய அணிக்கு இவர் தனது வழியை மேற்கொண்டபோது இன்றைய நிலையில் உள்ள பாந்துக்கும், பதினான்கு வருடத்திற்கு முன்னால் இருந்த தோனிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. இப்பொழுது, பாந்த்க்கு இருக்கிற சுமை மாதிரி, எம் எஸ் தோனி ஒரு சுமையுடன் அணிக்கு வரவில்லை. எந்த புகழ்பெற்ற விக்கெட் கீப்பரும் இல்லை. அந்த நாட்களில் தினேஷ் கார்த்திக் அல்லது பார்த்திவ் படேல் வீரர்கள் இவரை விட வயதில் குறைவாக இருந்தனர். அதனால் எம் எஸ் தோனிக்கு அதிகமான அழுத்தமும் அவரிடமிருந்து எந்தவிதமான எதிர்பார்ப்பும் இருக்கவில்லை என்று தரக் சின்ஹா மேலும் குறிப்பிட்டார்.

எந்த விக்கெட் கீப்பர் உலக சர்வதேச போட்டிகளில் கேட்சுகளையும் மற்றும் ஸ்டம்புகளையும் தவற விட வில்லை? மகேந்திர சிங்க் தோனி கூட கேட்சுகளையும் மற்றும் ஸ்டம்புகளையும் தவற விட்டவர் ஆவர். நல்ல விஷயம், தேர்வாளர்கள் அவருடன் தொடர்ந்து இருந்தனர். ஒரு பருவத்திற்கு பிறகும் அவரை கைவிடவில்லை. அவர் விளையாட்டில் சிறப்பாக விளையாடுவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொண்டார் என்று தரக் சின்ஹா குறிப்பிட்டார்.

Be the first to comment on "பயிற்சியாளரின் கருத்து: ரிஷப் பந்த்தை, எம் எஸ் தோனியுடன் ஒப்பிடுவது நியாயமற்றது.எம் எஸ் தோனியும் பல வாய்ப்புகளை தவறவிட்டார்"

Leave a comment