குயின்டான் டி காக் சதத்திற்கான தடையை உடைத்து மழையின் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றியடைய செய்தார்

தென் ஆப்பிரிக்காவின் 331க்கு ஐந்து (331/5) என்ற ஓட்டங்களில், குயின்டான் டி காக் 121 ஓட்டங்களை எடுத்தார்.  இதை,  தென் ஆப்பிரிக்காவின் கேப்டனான ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் இது ஒரு “சிறந்த” அணி பேட்டிங் முயற்சியாக இருக்கிறது என்று சிறப்பித்துக் காட்டினார்.

தென் ஆப்பிரிக்காவின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் குயின்டான் டி காக் சதம் (100 ஓட்டங்கள்) அடித்து கொண்டாடுகிறார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த போட்டிகளில், குயின்டான் டி காக்கின் அபார சதத்தால 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா.  தென் ஆப்பிரிக்காவின் மொத்த ஓட்டங்களில் அதாவது (331க்கு ஐந்து விக்கெட்டுகள்) குயின்டான் டி காக் 121 ஓட்டங்களை எடுத்து அணிக்கு வெற்றி வாகையை சூடினார். இந்த வெற்றியை தென் ஆப்பிரிக்காவின் அணி தலைவரான ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் இது ஒரு “சிறந்த” அணி பேட்டிங் முயற்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

நீண்ட நேரம் மழை பெய்த காரணத்தால், இலங்கை அணிக்கு, வெற்றி பெறுவதற்கான ஓட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டது. இருபத்தி நான்கு ஓவரில் 193 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், இலங்கை அணி ஐந்து விக்கெட்டுக்கு 121 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி தென்ஆப்பிரிக்கா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

களம் இறங்கிய இலங்கை அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதன் பிறகு மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கப் பட்டது. மற்றும் இலங்கை அணிக்கு வெற்றிக்காக 48 பந்துகளில் 118 ஓட்டங்கள் எடுக்கவேண்டும் என்ற இயலாத நிர்பந்தனையாக அமைந்தது. குறிப்பாக இலங்கை அணியின் ஆட்டக்காரரான குஷால் பெரேராவுக்கு காலின் மீது ஏற்பட்ட காயத்தால் அவரால் சரியாக விளையாட முடியாத நிலையில் இருந்தார். பெரேரா,  இலங்கை அணிக்கு நட்சத்திர ஆட்டக்காரரான இவர் மிகவும் வருத்தமாக காணப்பட்டார். இதே மைதானத்தில் கடந்த மாதம் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. ஆனால் இதே மைதானத்தில் நடந்த இந்த ஒரு நாள் போட்டியில் ஏழாவது ஒவரின் பொழுது அவர் கால் மீது ஏற்பட்ட காயத்தால் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

மழையால் பாதிக்கப்பட்ட விளையாட்டுகள் நன்றாக இருக்காது. ஆனால், நங்கள் மிகச் சிறப்பாக எதிரணியின் மீது பந்தை வீசினோம். விக்கெட்டை எடுத்தோம். இது எதிராணியினருக்கு, இந்த முழு விளையாட்டில், மிகவும் கடுமையாக இருக்கப் போகிறது என்று தென் ஆப்பிரிக்காவின் அணி தலைவரான ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் இவ்வாறாக தெரிவித்தார். இலங்கை அணியின் கேப்டனான லசித் மலிங்கா இவராக குறிப்பிட்டார்; எங்களுடைய மோசமான பந்து வீச்சாலும் சரியான முறையில் மைதானத்தில் அணி வீரர்கள் விளையாடாததால், தென் ஆப்பிரிக்கா அணி வழக்கமான ஓட்டங்களை விட 40 மற்றும் 50 ஓட்டங்களுக்கு மேல் அதாவது அதிகபட்சமான ஓட்டங்களை எடுத்தது என்று குறிப்பிட்டார்.

நாங்கள் ஒரு நல்ல தொடக்கத்தை (பேட் மூலம்) கொண்டிருந்தோம். ஆனால், மழைக்குப் பிறகு விளையாடுவதற்கு எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது என்று தெரிவித்தார். தென் ஆப்பிரிக்காவின் மிகச் சிறந்த ஆட்டக்காரரான குயின்டான் டி காக் அவரது ஐந்து ஆட்டங்களில் அதாவது 80 மற்றும் 94 ஓட்டங்களுக்கு இடையில் ஒரு நல்ல ஓட்டத்தை எடுத்தார். இந்த ஓட்டங்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் உள்ளிடங்கி இருக்கிறது. இவர் அடித்த பதினாலாவது ஒரு நாள் சதம் அதாவது எம்பத்தொன்பது பந்துகளில் பேரானந்தத்தை விட ஒரு நல்ல நிவாரணத்தை தருகிறது.

இறுதியாக மாற்றுவது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது,  என்று ஆட்ட நாயகனான அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முதல் இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், டி காக் 31 ரன்களில் வீழ்த்துவதற்கு முன்னதாக 16 பவுண்டரிகளையும் இரண்டு சிக்சர்களையும் அடித்தார். இவரும் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் சேர்ந்து அறுபத்தி ஆறு பந்துகளில் தொன்னுத்தியேழு ஓட்டங்களை எடுத்தனர். டூ பிளெஸ்ஸிஸ் 27 பந்துகளில் 36 ஓட்டங்களை எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணி இறுதி பத்து ஓவரில் தொன்னுத்தியொன்பது ஓட்டங்களை குவித்தது. இலங்கை அணி முதலாவது ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கு பத்தொன்பது வயதின் கீழ் ஆடவர் அணியின் கேப்டனான கமிந்து மெண்டீசுக்கு வாய்ப்பு அளித்தது. இவர் நாற்பத்தி ஐந்து ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இவர் வரும் போட்டிகளில் ஒரு நல்ல ஆட்டக்காரராக திகழ்வார் என்று மலிங்கா தெரிவித்தார்.

Be the first to comment on "குயின்டான் டி காக் சதத்திற்கான தடையை உடைத்து மழையின் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றியடைய செய்தார்"

Leave a comment