ஐம்பது ஓவர் ஆட்டத்தில், ராஸ் டெய்லர் அவருடைய 47வது அரை சதத்தை எடுத்து அவருடைய ஓட்ட எண்ணிக்கையை 8026 ஆக உயர்த்தினார். இதன் மூலம் அவர், ஸ்டீபன் பிளெமிங்கின் 8007 ஓட்டத்தை விட அதிகம் பெற்று அவரை முந்தி செல்கிறார்.
பங்களாதேஷ் அணிக்கெதிரான கடைசி ஆட்டத்தில் ரோஸ் டெய்லர் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி முதல் 2 ஆட்டத்தில் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.
இப்பொழுது ராஸ் டெய்லர், ஒரு நாள் போட்டியில், நியூஸிலாந்து அணியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக விளங்குகிறார். அவர் புதன்கிழமையன்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அரை சதம் எடுத்து நியூஸிலாந்து அணியில் முதலாவது வீரராக இருக்கிறார். நியூஸிலாந்து அணி பங்களாதேஷ் அணிக்கு இன்று டுனிடினில் நடந்த போட்டியில் 331 ஓட்டங்களை வெற்றிக்காக நிர்ணயித்தத்து.
டெய்லர் 69 ஓட்டத்தை 81 பந்துகளில் எடுத்தார். நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்ய தொடங்கியது. அது ஆட்ட நேர முடிவில், ஆறு விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களை குவித்தது. நியூஸிலாந்து அணியில் ராஸ் டெய்லரை தொடர்ந்து, ஹென்றி நிகால்ஸ் மற்றும் டாம் லதாம் அவர்கள் அரை சதம் அடித்தனர்.
பின்னர் விளையாடிய பங்களாதேஷ் அணி 242 ரன் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இந்தப் போட்டியிலும் நியூசிலாந்து வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது
பங்களாதேஷ் அணியில் முஸ்தபிஸுர் ரஹ்மான் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 10 ஓவர்களில் 93 ரன்களை கொடுத்தார்.
இந்த ஆட்டத்தில் டெய்லர் 43-வது ரன்களை எடுத்தபோது 8 ஆயிரம் ரன்களை தொட்டார். ஒருநாள் போட்டியில் ஆயிரம் ரன்களை எடுத்த 2-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஐம்பது ஓவர் போட்டிகளில், டெய்லர் எடுத்த 47 வது அரை சத்தத்தால், அவர் அவருடைய ஓட்ட எண்ணிக்கையை 8026 ஆக உயர்த்தினார். இதன் மூலம் ஸ்டீபன் பிளெமிங்கின் 8007 ஓட்டத்தை விட அதிகம் பெற்று நியூஸிலாந்து அணியில் முன்னணி வீரராக இருக்கிறார்.
34 வயதான டெய்லர் 218 ஒருநாள் போட்டி, 203 இன்னிங்சில் விளையாடி 8026 ரன் எடுத்துள்ளார். சராசரி 48.34 ஆகும். இதில் 20 சதமும், 47 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 181 ரன் குவித்துள்ளார்.
அவர் சொன்னார்; ஒரு ஆண்டிற்கு முன்னாள் நான் விளையாடிய பொழுதே இதை கண்டிப்பாக எடுத்திருப்பேன். நீண்ட காலமாக நீங்கள் விளையாடினால் இந்த சாதனையை பதிவு செய்ய முடியும் மற்றும் இது அடுத்த தலை முறை ஆட்டக்காரர்களுக்கு மாதிரியாக இருக்கும். நான் இன்னும் இப்படி விளையாடுவதற்கு விரும்புகிறேன் மற்றும் எனக்கு விளையாடுவதற்கு இன்னும் சில வருடங்கள் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
உலகக் கோப்பைக்கு முன்னதாக பயிற்சியாளர் கேரி ஸ்டெட் அவர்களை கவர்ந்திழுக்கும் மற்றும் போட்டியில் ஒரு இடத்தை பதிவு செய்வதற்காக நியூஸிலாந்து அணி வீரர்கள் பல குழு அணியின் இறுதி ஒருநாள் போட்டியில் பங்கேற்றனர்.
பேட்ஸ்மேன் கொலின் முன்ரோ நிலைத்து ஆடுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் எட்டு ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டத்தை விட்டு வெளியேறினார். அதாவது எட்டு ஒருநாள் போட்டிகளில் அவர் ஒரு அரை சதத்தை மட்டுமே பெற்றார். நிக்கோலஸ் ஒரு துவக்க ஆட்டக்காரராக 64 ரன்களைக் குவித்தார்.
ஹென்றி உடைய விளையாட்டுத் திறன் அவரை ஒரு சிறந்த விளையாட்டு வீரராக எங்களுக்கு காட்டியது. அவர் எங்கள் பேட்டிங் வரிசையில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறார். கேரி ஸ்டெட் இவ்வாறாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
லதம் 59 ரன்கள் எடுத்த நிலையில் கொலின் டி கிராண்ட்ஹோம் மற்றும் ஜிம்மி நீஷம் 37 ரன்கள் எடுத்தனர்.
Be the first to comment on "நியூசிலாந்து – பங்களாதேஷ்:ராஸ் டெய்லர் சாதனை படைத்தார்."