MI vs DC: கூலாக வென்று கொடி நாட்டிய மும்பை!

மும்பை இந்தியன்ஸ் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது

ஐபிஎல் 13ஆவது சீசன் 27ஆவது லீக் போட்டியில் குவின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்ததால், மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் 4 விக்கெட்களை இழந்து 162 ரன்கள் எடுத்து மும்பை அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர் குவின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து தலா 53 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

அபுதாபியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர் பிரித்வி ஷா 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அஜிங்கிய ரஹானே 15 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும், ஷிகர் தவனும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். இறுதியில் ஷ்ரேயஸ் ஐயர் 33 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். ஷிகர் தவன் கடைசிவரை களத்தில் இருந்தார். இதனால், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 162 ரன்களை குவித்தது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் ரோஹித் ஷர்மா 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், குவின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தனர். இருவரும் தலா 53 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பிய நிலையில், கெய்ரன் பொல்லார்டு குருனால் பாண்டியா இருவரும் அணியை வெற்றிபெறச் செய்தனர்.

மும்பை அணி 163 ரன்களை துரத்திக் களமிறங்கியபோது, காகிசோ ரபடா முதல் ஓவரை வீசினார். ஆனால், அவருக்கு தொடர்ந்து ஓவர்கள் வழங்கப்படவில்லை. பவர் பிளேவில் ஒரு ஓவர் மட்டுமே வீசிய அவருக்கு கூடுதல் ஓவர்கள் கொடுத்திருந்தால், டெல்லி அணிக்கு நன்மை தரும் விஷயம் நடந்திருக்கும் என யூகிக்கப்படுகிறது.

டெல்லி அணி வழக்கத்திற்கு மாறாக பீல்டிங்கில் அதிகளவில் சொதப்பியது. அஜிங்கிய ரஹானே ரன் அவுட்டை தவறவிட்டார். அதேபோல் பிரித்வி ஷா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் கேட்ச்களை தவறவிட்டனர். இந்த தவறுகள் தோல்விக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகின்றன. குறைவான ஸ்கோரை அடித்துவிட்டு, பீல்டிங்கில் சொதப்பியதால் மும்பை அணிக்குக் கூடுதல் பலம் சேர்ந்துகொண்டது.

Be the first to comment on "MI vs DC: கூலாக வென்று கொடி நாட்டிய மும்பை!"

Leave a comment

Your email address will not be published.