IPL 2021: 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வென்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்…

www.indcricketnews.com-indian-cricket-news-083

துபாய் : ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தினர். இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து விளையாடினார்கள். இந்த அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விருதமான் சஹா விளையாடினார்கள்.  ஆனால்  அதிரடியாக விளையாடும்  டேவிட் வார்னர் வந்த வேகத்தில் ரன்கள் எதுவும் எடுக்காமல் பூஜ்ஜியத்துடன் வெளியேறினார்.

இது சற்று பின்னடைவாகவே அமைந்தது.  மற்றொரு வீரர்  1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் வினாசினார் இருதியில் (18) ரன்கள் எடுத்து  வெளியேறினார். பெளலிங்கில் மிரட்டி வந்த டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை கொடக்கு போடும் வேகத்தில் வீழ்த்தியது.  கேப்டன் கேன் வில்லியம்சன் வெறும் (18) ரன்களுடனும், மணீஷ் பாண்டே (17) ரன்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

இவர்களைத் தொடர்ந்து வந்த ஜேசன் ஹோல்டர் ப்ரீ ஹிட்டில் ஒரு சிக்ஸர் அடித்து ஆறுதல் தந்த நிலையில் அக்சர் படேல்  வீசிய பந்தில் வெளியேறினார். ஆனால்  முன்னணி வீரர் கேதர் ஜாதவ் (3) ரன்னில் ஆட்டமிழந்தது   அனைவருக்கும் அதிர்ச்சியாகவே அமைந்தது. இவ்வாறாக கடினமாகச் சென்றது சன்ரைசர்ஸ் அணிக்கு. இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் அடித்திருந்தது சன்ரைசர்ஸ் அணி.

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கத்துடன் களம் கண்டது டெல்லி . தொடக்க வீரர்களாக இறங்கிய ப்ரித்வி ஷா (11) ரன்களில் அவிட் ஆனார் ஆனால் மற்றொரு வீரரான ஷிகர் தவான் (42) ரன்கள் அடித்து வலுவான அடித்தளம் அமைத்தார். ஆகையால் (422) ரன்கள் குவித்ததால்  மீண்டும் ஆரஞ்சு கேப் – ஐ கைப்பாற்றினார் தவான். பின்பு களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக (47) ரன்கள் குவித்தார். பின்பு வந்த  ரிஷப் பண்ட் (35) ரன்கள் குவித்து 17.5 வது ஓவரிலேயே அணியை வெற்றிபெறச் செய்தார்கள்.

ஆகையால் டெல்லி அணி  2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட்  வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றிப் பெற்றது. இதுவரையில் நடந்த 9 போட்டிகளில் 7  போட்டியில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. அதே போல் 8 போட்டியில் இலவரை விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் தோல்வியர் தழுவியுள்ளது. இதனால் வெறும் 2 புள்ளிகள் மட்டும் பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "IPL 2021: 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வென்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்…"

Leave a comment

Your email address will not be published.


*