India vs England: 5 வது நாள் போட்டியின் நிலவரம்…

நாட்டிங்காம்: டெஸ்டின் கடைசி நாளில் இந்தியா வெற்றிபெற அதிக வாய்ப்பு இருந்த நிலையில், நாள் முழுவதும் மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டு டிராவில் முடிந்தது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் கடந்த 4-ந்தேதி ஆரம்பமானது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 183 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

அதன்பின் விளையாடிய இந்தியா  அணி 278 ரன்கள் சேர்த்தது. 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் (109) சதத்தால் 303 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆக்கப்பட்டது. இதனால் இங்கிலாந்து ஒட்டுமொத்தமாக 208 ரன்கள் முன்னிலைப் பெற்று விளங்கியது.

எனவே, இந்தியாவுக்கு 209 ரன்கள்  வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி. 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யத் துவங்கியது. இந்தியா  4-வதுநாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி நாளில் 9 விக்கெட் கைவசம் இருந்தது.

157 ரன்கள் அடித்தால் வெற்றியை ருசிக்கலாம் என்ற எண்ணத்தில் இந்தியா களம் இறங்க தயாராக இருந்த நிலையில்,  துரதிர்ஷ்டவசமாக காலையில் இருந்து நாட்டிங்காமில் மழை இடைவிடாது வந்துக்கொண்டே இருந்தது. ஆகவே போட்டி தொடங்குவதிலும் தாமதமானது.

மழை தொடர்ந்து பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கப்படவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகாவது மழை நின்று விட்டால்  விளையாட முடியும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.  ஆனால் தேநீர் இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு நம்பிக்கை குறையத்தொடங்கியது.

மழை விட்டுவிட்டு பெய்ய ஆரம்பித்ததால், போட்டியை தொடங்குவதற்கான எந்த ஒரு முயற்சியும் எடுக்க முடியாமல் அவதியுற்றனர். இதற்கு வேறு மாற்றுவழி கண்டுப் பிடிக்க இயலாமல் இறுதியாக கடைசி நாள் போட்டி கைவிடப்படுவதாக ஐசிசி வாரியம் முடிவெடுத்து அறிவித்தது. இதனால் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி எளிதாக வெற்றி பெற பல வாய்ப்புகள் இருந்த நிலையில், மழையால் அந்த வெற்றி பறிபோனது அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. வெற்றியின் விளிம்பில் இருந்த இந்திய அணி இறுதியில் அதைக் கைப்பற்ற முடியாமல் போனதால் வீரர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இது இந்திய அணி வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. இருப்பினும் இந்திய அணியின் கேட்டன் தனது சக வீரர்களிடம் அவர்களது, விளையாட்டுக்குரித்து பாராட்டி அவர்களை உற்ச்சாகப்படுத்தினார்.

Be the first to comment on "India vs England: 5 வது நாள் போட்டியின் நிலவரம்…"

Leave a comment

Your email address will not be published.


*