India vs England 3rd Test: இந்தியாவின் ப்ளேயிங் 11.. விராட் கோலி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

www.indcricketnews.com-indian-cricket-news-090

ஹெட்டிங்லி: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து கேப்டன் விராட் கோலி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்தியா, இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் ஒரு போட்டி மழைக்காரணமாக டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி கொண்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹெட்டிங்லியில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்டில் அபார வெற்றிபெற்றுள்ளர். இந்த போட்டியில் இந்திய டெயில் எண்டர்களான பும்ர மற்றும் ஷமி ஆகியோரின் பார்ட்னர்ஷிப் மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது.

இந்திய அணி, அடுத்த மூன்று டெஸ்ட்களிலும் சிறப்பாக விளையாடி 4-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இங்கிலாந்து அணியும் கடும் சவால் கொடுக்க தயாராகத்தான் உள்ளது.  சொந்த மண்ணிலேயே படுமோசமாக தோல்வியை தழுவியதால் இங்கிலாந்து வீரர்கள் மீது அந்நாட்டு ரசிகர்களே கடும் விமர்சனங்களை தெரிவித்து வருவதால்  இந்திய அணியை 3வது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என இங்கிலாந்து முடிவுடன் இருக்கிறது.இதற்காக டேவிட் மாலன் உள்ளிட்ட முக்கியமான 4 வீரர்களை அணிக்குள் சேர்த்திருக்கிறார்கள்.இதனை சமாளிக்க இந்திய அணியின் ப்ளேயிங் 11 எப்படி இருக்கும் என மிகப்பெரும் எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது.  இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டிக்கான ப்ளேயிங் 11 குறித்து கேப்டன் விராட் கோலி அதிகாரப்பூர்வமாக , பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கோலி, ப்ளேயிங் 11ல் மாற்றம் கொண்டு வர எங்களுக்கு எந்த காரணமும் கிடைக்கவில்லை அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள். கடந்த போட்டியில் சூப்பர் கம்பேக் கொடுத்தோம்  எனவே வெற்றிக்கூட்டணியை கலைக்க யாராவது விரும்புவார்களா? எனக் கூறியுள்ளார். விராட் கோலியின் பதிலால், 3வது டெஸ்ட்டுக்கான ப்ளேயிங் 11ல் எந்தவித மாற்றமும் இல்லை என்பது புரிகிறது. எனவே பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், இஷாந்த் சர்மா என 4 வேகப்பந்துவீச்சாளர்களும், சுழற்பந்துவீச்சுக்கு ஜடேஜாவும் உள்ளனர். இந்தப் போட்டியிலும் அஸ்வினுக்கு இடமில்லை என்பது வருத்தத்துக்குரியது.

சென்ற ஆட்டத்தில் சரியாக விளையாடாத வீரர்களுக்குப்பதில் அஸ்வின் தேர்வு செய்யப்படலாம் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்து வந்தது ஆனாலும் இங்கு அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

Be the first to comment on "India vs England 3rd Test: இந்தியாவின் ப்ளேயிங் 11.. விராட் கோலி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்."

Leave a comment

Your email address will not be published.


*