India vs England: 3வது டெஸ்ட் முதல்நாள் நிலவரம்…

www.indcricketnews.com-indian-cricket-news-095

லீட்ஸ்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நேற்று  நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 78 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து அர்ச்சியளித்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினார்கள் கடந்த போட்டியில் இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்திருந்ததால், இவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரிலேயே ராகுல் டக் அவுட்டாகி வெளியேறிவிட்டார்.

இதன் பின்னர் வந்த புஜாரா (1) ரன்னுக்கும், விராட் கோலி (7) ரன்களுக்கும் வெளியேறினர். கடந்த போட்டியில் சர்ச்சைகளுக்கு உள்ளான ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த போட்டியில் முதல் 3 விக்கெட்களையும் அசால்ட்டாக கைப்பற்றினார்.

டாப் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்ததால், ரோஹித் ஷர்மா, துணைக்கேப்டன் ரஹானே இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தார்கள். சிறிது நேரம் இவர்கள் தாக்குப்பிடித்த போதும் முதல் செஷன் கடைசி ஓவரில் ரஹானே (18) ரன்களுக்கு அவுட் ஆனார். இதன் பின்னர் வந்த எந்த வீரருமே இரட்டை இலக்க ரன்களை கூட அடிக்க முடியாமல் வெளியேறினார்கள். ரிஷப் பந்த் (2) ரன்களுக்கு வெளியேற நீண்ட நேரமாக பார்ட்னர்ஷிப்புக்காக காத்திருந்த ரோகித் சர்மா  (19) ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார்.

இறுதியில் இஷாந்த் ஷர்மா (8) ரன்களும், சிராஜ் (3) ரன்களும் சேர்க்க முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் செய்யப்பட்டது. இதனையடுத்து தனது 2வது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி வீரர்கள் ஹசீப் ஹமீத் மற்றும் ரோரி பேர்ன்ஸ் ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துள்ளனர்.

இந்திய வீரர்கள் எவ்வளவு முயற்சித்தும் இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் ஜோடியை அவுட்டாக்க வே முடியவில்லை. இதனால் இருவருமே அரைசதம் கடந்து  முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து.

125 பந்துகளை சந்தித்த ரோரி பேர்ன்ஸ் (52) ரன்களுடனும், ஹசீப் ஹமீத் 130 பந்துகளை சந்தித்து (60) ரன்களும் எடுத்து களத்தில் இருக்கிறார்கள். இதன் மூலம் தற்போது வரை முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 42 ரன்கள் முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் கை ஓங்கியுள்ளது.

Be the first to comment on "India vs England: 3வது டெஸ்ட் முதல்நாள் நிலவரம்…"

Leave a comment

Your email address will not be published.


*