India VS England: 2வது டி20 முதல் நாள் நிலவரம்…

www.indcricketnews.com-indian-cricket-news-047

லார்ட்ஸ்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இப்போட்டியிலும் முதலில் சாரல் மழை பொழிந்து நின்றுவிட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பவுலிங் செய்தார்.  இந்திய அணி சார்பில் களமிறங்கிய ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா – கே.எல்.ராகுல் சிறப்பாக தொடக்கத்தை கொடுத்தனர்.   சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா, 145 பந்துகளை எதிர்கொண்டு 83 ரன்களை எடுத்தார்.

இதில் 11 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் உள்ளடங்கும்.  அயல்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் 79 ஆக இருந்தது வந்ததை முறியடித்தார். இதன் மூலம் முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 126 ரன்களைக் குவித்தது. லார்ட்ஸ் மைதானத்தில் கடைசியாக 1952ம் ஆண்டு தான் இந்தியாவின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்தது.

அதன் பிறகு இன்று தான் 50 + பார்ட்னர்ஷிப் சேர்ந்துள்ளது. இதன் பின்னர் முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய சட்டீஸ்வர் புஜாரா, 9 ரன்களுக்கு வெளியேறினார். ஆனால் மறுமுணையில்  கே.எல்.ராகுல் நிதானமாக ரன்களை சேர்த்தார். இங்கிலாந்து பவுலர்கள் எவ்வளவு முயற்ச்சி செய்த போதும், அவர்களை சுலபமாக எதிர்கொண்ட கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினார்.

அதில் ஒரு சிக்ஸரும் 9 பவுண்டரிகளும் உள்ளடங்கும். ராகுலின் இந்த சதம் இந்தியாவுக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த 3வது இந்திய ஓப்பனர் என்ற பெருமையை ராகுல் பெற்றார். இதற்கு முன்னர் அங்கு 1952ம் ஆண்டு வினோ மான்கட் 184 ரன்களும் அதன் பின்னர் 1990ம் ஆண்டு ரவி சாஸ்திரி 100 ரன்களை அடித்திருக்கிறார்கள்.

இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய கேப்டன் விராட் கோலி நல்ல பார்ட்னர்ஷிப்புடன் முதல் சில பந்துகளை கூர்ந்து கவனித்து நிதானமாக விளையாடி வந்த கோலி, பின்னர் தனது வழக்கமான ஆட்டத்திற்குள் வந்தார். 103 பந்துகளை சந்தித்த கோலி அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  43 ரன்களிலேயே வெளியேறினார்.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் – துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே ஜோடி நிதானமாக வினளயாடி இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை சேர்த்து வலுவான நிலையில் உள்ளனர். கே.எல்.ராகுல் 127 ரன்களுடனும், அஜிங்கியா ரகானே 1 ரன்னுடனும் களத்தில் உள்ளார்கள்.

Be the first to comment on "India VS England: 2வது டி20 முதல் நாள் நிலவரம்…"

Leave a comment

Your email address will not be published.


*