இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 4-ம் தேதி தொடங்க உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
இந்த தொடருக்காக இங்கிலாந்துக்குச் சென்றுள்ள இந்திய அணியில் ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஸ்டாண்ட்பை வீரரான ஆவேஷ் கான் ஆகிய மூவரும் தங்களுக்கு ஏற்பட்ட காயத்தால் போட்டியிலிருந்து விளகிக் கொண்டார்கள்.
இதையடுத்து அவர்களுக்கு மாற்று வீரர்களாக பிரித்வி ஷாவும், சூர்யகுமார் யாதவும் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். அவர்கள் இங்கிலாந்துக்கு சென்றதும் குவாரண்டினை முடித்துவிட்டுத்தான் இந்திய அணியுடன் இனைந்து விளையாட முடியும் என வாரியம் கூறிவிட்டது.
அவர்கள் இருவரும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக விளையாட முடியாத நிலை உருவானது. இந்நிலையில், ஷுப்மன் கில் காயத்தை தொடர்ந்து, ரோஹித் சர்மாவுடன் மயன்க் அகர்வால் தான் தொடக்க வீரராக இறங்கப்போகிறார் என்பது முன்பே உறுதியானது.
அணியில் இருக்கும் மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான கேஎல் ராகுலை மிடில் ஆர்டரில் ஆடவைக்கும் திட்டத்தில் இருந்தது இந்திய அணி ஆனால் போட்டிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக, பயிற்சியின்போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மயன்க் அகர்வாலுக்கு முகமது சிராஜின் பந்துவீச்சினால் பின் மண்டையில் காயம் ஏற்பட்டுவிட்டது.
சிராஜ் வீசிய பந்து மயன்க் அகர்வாலின் ஹெல்மெட்டின் பின்பகுதியில் பலமாக தாக்கியுள்ளது. ஆகையால் உடனடியாக அவரை பரிசோதித்த ஃபிசியோ நிதின் படேல், அவரை கன்கஷனுக்கு அனுப்பி வைத்தார்கள்.
அதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து மயன்க் அகர்வாலும் நீக்கப்பட்டுள்ளார். இறுதியில் திடீரென உருவான இந்த மாற்றத்தால் ரோஹித்துடன் கே.எல் ராகுல் தொடக்க வீரராக இறங்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. மிடில் ஆர்டரில் இறங்குவதாக இருந்த ராகுல் தொடக்க வீரராக இறங்குவதால், ஹனுமா விஹாரிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி, ஆடும் லெவன் காம்பினேஷனை உறுதி செய்து, ஏற்கனவே ஒரு திட்டத்தில் இருந்திருப்பார்கள். ஆனால் தற்பொழுது கடைசி நேரத்தில் மயன்க் அகர்வால் காயமடைந்ததால், இந்திய அணியின் திட்டம் அனைத்தும் மாறுபட அதிகம் வாய்ப்புள்ளது.
இது இந்திய அணிக்கு கடந்த டெஸ்ட் மேட்ச்சைப் போலவே கடினமான ஆரம்பமாக அமைந்துள்ளது. இதிலிருந்து இந்திய அணி மீண்டு வந்து தொடரைத் தன்வசப்படுத்துமா என்பது அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பாகவே உள்ளது.
Be the first to comment on "India vs England:பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனின் பின் மண்டையில் பலத்த காயம்…"