IND vs AUS: முதலாவது T20I அறிக்கை அட்டை – ரோஹித் சர்மா, உமேஷ் யாதவ் ஆட்டத்தால் இந்திய அணி கீழே போனது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து,  இந்திய வீரர்களின் அறிக்கை அட்டை இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் T20 ஐ இழந்த இந்திய அணிக்கு, விராத் கோஹ்லி வருத்தத்துடன் காட்சி அளித்தார்.

முதலாவது T20 போட்டியில் இந்தியா கிட்டத்தட்ட கீழே இருந்தது. இந்திய அணியால் குறைந்த பட்சம் அதாவது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த முதலாவது T20 போட்டியில், 20 ஓவர்களில், 126 / 7 என்ற கணக்கில்  மட்டுமே ரன்களை எடுக்க முடிந்தது. இருப்பினும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்தை வீசினார்கள். ஆனால் விளையாட்டின் இறுதி ஓவரில் இந்தியா ஆட்டத்தின் வெற்றியை இழந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவின் ஆட்டக்காரரான பாட் கம்மின்ஸ் சிறப்பாக விளையாடி அவருடைய அணியை கடைசி பந்தில் வெற்றியடைய செய்தார். இதன் காரணமாக, இந்திய அணி மூன்று  விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து,  இந்திய வீரர்களின் அறிக்கை அட்டை இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரோஹித் சர்மா – மதிப்பீடு: 1/10, தீர்ப்பு: மிக மோசமான

இந்தியாவிற்கு ஆட்ட  தொடக்கத்தில் கூடுதல் ரன் எடுப்பது மிகவும் ஒரு முக்கிய அம்சமாகும். இந்தியாவின் தொடக்க ஆட்ட வீரரரன ரோஹித் சர்மா எதிர்பாராதவிதமாக ஒரு நல்ல தொடக்கத்தை தரவில்லை. ஆஸ்திரேலியாவின் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் ரோஹித் ஷர்மா ஐந்து ரன்கள் எடுத்து இருந்த பொழுது அவரை அவுட் செய்தார். வழக்கமாக ஒரு மந்தமான விக்கெட் மீது பேட்டிங் செய்ய சிறந்த நேரம் ஒரு இன்னிங்சில் தொடக்கத்தில் உள்ளது. ஆனால் ரோஹித் ஷர்மா வாய்ப்பை தவற விட்டார்.

KL ராகுல் – மதிப்பீடு: 7/10, தீர்ப்பு: நல்லது

KL ராகுல் சிறப்பாக விளையாடி வேகமாக ஐம்பது ரன்களை குவித்தார். இந்தியாவின் உலகக் கோப்பை தொடரில் KL ராகுல் மூன்றாவது தொடக்க வீரராகத் திகழ்கிறார்.  இப்படியே அவர் சிறப்பாக விளையாடினால் இந்த ஆண்டிற்கு பிறகு அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரே நடக்க இருக்கிற போட்டியில் கலந்து கொள்ள முடியும். இவர் அவருடைய ஐம்பது ரன்களில் ஆறு – நன்கு ரன்கள் மற்றும் ஒரு  – ஆறு ரன்கள் எடுத்தார். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

விராட் கோலி – மதிப்பீடு: 4/10, தீர்ப்பு: சராசரி

விராத் கோலி ஒரு நல்ல துவக்கத்தை கொடுத்தார்.  ஆனால், அவரது ரன்களை ஒரு பெரிய ஓட்டமாக மற்ற முடியவில்லை. அவர் இருபத்தி நான்கு ரன்கள் எடுத்து இருந்த பொழுது ADAM ZAMPA வின் பந்து வீச்சில் NATHAN COULTER-NILE  இடம் கேட்ச் கொடுத்து லாங் ஆனில் (LONG-ON) அவுட் ஆனார். இந்திய அணியின் கேப்டனான இவர் மூன்று – நான்கு ரன்களை அடித்தார். இவர், ஒரு, ஆறு ரன் கூட அடிக்கவில்லை. ஆனால் அவருடைய ஆட்டத்தின் விளையாட்டு மதிப்பு 141.17 ஆக இருந்தது.

ரிஷாப் பன்ட் – மதிப்பீடு: 1/10, தீர்ப்பு: மிக மோசமான

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் – பாட்ஸ்மானான இவரும் சிறப்பாக விளையாடவில்லை. இவர் மூன்று ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

MS தோனி  – மதிப்பீடு: 4/10, தீர்ப்பு: சராசரி

இவர் அணிக்கு விளையாட வரும் பொழுது இந்தியாவின் நிலைமை 80 ரன்களுக்கு மூன்று விக்கெட்டாக இருந்தது. அனால், அவருடைய ஜோடி ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்கள் எடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். தோனியின் நிதானமான ஆட்டத்தால் இந்தியாவை ஒரு நல்ல நிலைமைக்கு எடுத்துச் சென்றார்.  அவர் 37 பந்துகளில் 29 ரன்கள்  எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

தினேஷ் கார்த்திக் – மதிப்பீடு: 1/10, தீர்ப்பு: மிக மோசமான

இவரும் சிறப்பாக விளையாட வில்லை. ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்து NATHAN COULTER-NILE  பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

க்ருனால்  பாண்டியா  மதிப்பீடு: 7/10 தீர்ப்பு: நல்லது

இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் தனது நான்கு ஓவர்களில் ஒரு விக்கெட்டை எடுத்து 17 ரன்கள் கொடுத்தார்.. அவர் 4.25 என்ற விகிதத்தில் பந்து வீசினார். ஆஷ்டன் டர்னர் விக்கெட்டை 17வது ஓவரில் எடுத்தார்.

உமேஷ் யாதவ் – மதிப்பீடு: 2/10, தீர்ப்பு: மிக மோசமான

இவர் நன்கு ஓவரில் அதிகமாக 35 ரன்களை மிக தாராளமாக விட்டு கொடுத்தார். இவருடைய பந்து வீச்சு சராசரி விகிதம் 8.75 ஆக இருந்தது. போட்டியில் அதாவது இறுதி ஒவரில் இந்தியாவின் வெற்றி இவரை நம்பியே இருந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி பெற 14 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா அணி வீரர்களான ஜெய் ரிச்சர்ட்சன் மற்றும் பாட் கம்மின்ஸ் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெறச் செய்தனர்.

யூசுவெந்திர சஹால் – மதிப்பீடு: 5/10, தீர்ப்பு: சராசரி

இவரும் சரியாக விளையாடவில்லை. இவருடைய பாணிக்கு ஒரு விக்கெட்டை மட்டும் எடுத்து 28 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இவர் இந்தியின் வெற்றிக்கு நம்பிக்கை பத்திரமாக இருந்தார். இவர் ஆஸ்திரேலியாவின் மிக ஆபத்தான விளையாட்டு வீரர் க்ளென் மாக்ஸ்வெல்லை 14வது ஓவரில் அவுட் ஆக்கினார்.  இருந்தும் இந்தியாவால் வெற்றி பெற முடியவில்லை.

மாயங்க் மார்க்கண்டே – மதிப்பீடு: 4/10, தீர்ப்பு: சராசரி

இவரால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக T20 ஆட்டத்தில் இவருடைய அறிமுகத்தை தொடங்க முடியவில்லை. இடது கை சுழற் பந்து வீச்சாளரான இவர் 31 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்காமல் விளையாடினர். இவருடைய பந்து வீச்சில் இரண்டு – நான்கு ரன்கள் மற்றும் ஒரு – ஆறு ரன்கள் விட்டுக் கொடுத்தார். இவருடைய பந்து வீச்சின் சராசரி விகிதம் 7.75 ஆக இருந்தது.

ஜாஸ்ரிட் பம்ரா- மதிப்பீடு: 9/10, தீர்ப்பு: மிகவும் நல்லது

முதலாவது T௨௦ போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினர். இவர் மிகச் சொற்பமான ரன்களை கொடுத்து அதாவது அவருடைய நன்கு ஓவரில் 16 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இவர் சிறப்பாக பந்து வீசி 19 வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டே இரண்டு ரன்களை மட்டும் வீட்டுக் கொடுத்தார். இருப்பினும் அவருடைய சக வீரர்களால் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் இவர் தோற்று போன பகுதியில் இருந்தார்.

Be the first to comment on "IND vs AUS: முதலாவது T20I அறிக்கை அட்டை – ரோஹித் சர்மா, உமேஷ் யாதவ் ஆட்டத்தால் இந்திய அணி கீழே போனது"

Leave a comment

Your email address will not be published.


*