CSK vs RR: வலுவிழந்தது சென்னை புயல்… ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி!

ஐபிஎல் 13 ஆவது சீசனின் 37ஆவது லீக் போட்டியில் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடி ரன் குவித்ததால், ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி சென்னை அணியின் சார்பில் சாம் கர்ரன் மற்றும் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த ஜோடியில் டூ பிளஸ்சிஸ் 10(9) ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷேன் வாட்சன் 8(3) ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக சாம் கர்ரன் 22(25) ரன்களும், அம்பத்தி ராயுடு 13(19) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து கேப்டன் டோனியுடன், ஜடேஜா ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடியில் டோனி 28(28) ரன்களில் ரன் அவுட் ஆனார்.

இறுதியில் கேதர் ஜாதவ் 4(7) ரன்களும், ஜடேஜா 35(30) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ராகுல் தேவாட்டியா, ஜோப்ரா ஆர்ச்சர், கார்த்திக் தியாகி மற்றும் கோபால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்கத்தில் சற்று தடுமாறியது. பவர்பிளே முடிவில் (6 ஓவர்கள்) 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை இழந்து ராஜஸ்தான் சற்று திணறியது. எனினும், 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் – கேப்டன் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சர்வதேச அரங்கில் அனுபம் பெற்ற வீரர்களான இருவரும் நேர்த்தியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் வேகத்தை நகர்த்தினர். இதனால், ஆட்டம் சென்னையை விட்டு கைமாறியது.

17.3-வது ஓவரில் 126 487 ரன்கள் எடுத்து ராஜஸ்தன் ராயல்ஸ் அணி வெற்றியை ருசித்தது. ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 70 ரன்களும், ஸ்மித் 34 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடம் வகிக்கிறது.

Be the first to comment on "CSK vs RR: வலுவிழந்தது சென்னை புயல்… ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி!"

Leave a comment

Your email address will not be published.


*