ஐபிஎல் 2021 குவாலிவையர் 2: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது கடைசி ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.

www.indcricketnews.com-indian-cricket-news-049

ஷார்ஜா: ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 2வது குவாலிஃபைர் சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் கண்டது. கொல்கத்தா அணியின் கேப்டன் இயோன் மோர்கன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனால் பேட்டிங் செய்ய டெல்லி அணியின் நல்லதொரு தொடக்கத்துடன் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா- ஷிகர் தவான் ஜோடியில் பிரித்வி ஷா 18 ரன்களும், ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் 18 ரன்களும், நீண்ட நேரமாக களத்தில் இருந்த ஷிகர் தவான் 36(39) ரன்களும் ரிஷப் பண்ட் லோக்கி பெர்குசன் 6(6) ரன்களும்,சிம்ரான் ஹெட்மியர் 17(10) ரன்களும் எடுத்து அட்டமிழந்தனர்.

அக்ஸர் பட்டேல் 4(4)ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர்  30(27) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 135 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து கொல்கத்தா அணி  136 ரன்களை இலக்காக கொண்டு தொடக்க ஆட்டக்காரர்கள் வெங்கடேஷ் ஐயர்- சுப்மன் கில் ஜோடியில் வெங்கடேஷ் ஐயர்  55(41) ரன்களும் ,சுப்மான் கில் 46 (46)ரன்களும், நிதிஷ் ராணா 13(12) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க கேப்டன் இயோன் மோர்கன் தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், ஷகிப் அல் ஹசன், லோக்கி பெர்குசன் ஆகியோர் ஜுரோ ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் கொல்கத்தா அணிக்கு ரன்களை வாரிவழங்கிய டெல்லியின் வேகப் பந்துவீச்சாளர்கள் ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே  கடைசி 3 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி ரன்களை எடுக்க விடாமல் விக்கெட்டுகளை சாய்த்தனர். இறுதி வரை பரபரப்பான இந்த ஆட்டத்தில்

 வெற்றிக்கு 3 பந்துகளில் 6 ரன்கள் என்கின்ற நிலையில் ராகுல் திரிபாதி கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை அபார வெற்றி பெற செய்தார்.

கொல்கத்தா அணி அக்டோபர் 15 ம் தேதி நடக்கவுள்ள இறுதிப்போட்டியில்  குவாலிவையர் 1 ல் வெற்றி பெற்ற சென்னை அணியை எதிர்கொள்கிறது.

ஐபிஎல்- ல் இதுவரை 8 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சென்னை அணி அதில் 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்று 9வது முறையாக தகுதி பெற்றுள்ளது. அதேசமயத்தில் 2 முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய  கொல்கத்தா அணி 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்று 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Be the first to comment on "ஐபிஎல் 2021 குவாலிவையர் 2: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது கடைசி ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது."

Leave a comment

Your email address will not be published.


*