ஐபிஎல் 2021 குவாலிஃபேயர்: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-035

ஷார்ஜா: 14 வது ஐபிஎல் 2021  தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று துபாயில் (அக்:10) முதலாவது குவாலிஃபேயர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் களத்தில் பலப்பரிட்சை கண்டனர். மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான்- பிருத்வி ஷா ஜோடி பேட்டிங்கில் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இதில் 1 பவுண்டரியை விரட்டிய ஷிகர் தவான் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த பிருத்வி ஷா தனது சிறப்பான ஆட்டத்தால்  களத்தில் இருந்தார்.

அடுத்தடுத்து களம் கண்ட ஸ்ரேயாஸ் ஐயர் 8 பந்துக்கு 1 ரன் எடுத்தும் ,அக்ஸர் பட்டேல் வெறும் 10 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்த பிருத்வி ஷா 27வது பந்தில் தனது அரைசதத்தை பதிவு  செய்து 34 வது பந்தில் 7 பவுண்டரி 3 சிக்ஸர் என  மொத்தம் 60 ரன்களை விளாசியருந்த அவர் ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

டெல்லி அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்த நிலையில்  கேப்டன் ரிஷப் பந்த் – ஹெட்மியர் ஜோடி நீண்ட நேரம் களத்தில் இருந்தனர். இதில் ஹெட்மியர் 24வது பந்தில் 3 பவுண்டரி 1 சிக்ஸர் என மொத்தம் 37 ரன்களை எடுத்திருந்த நிலையில் 18.4 வது ஓவரில் டுவைன் பிராவோ வீசிய பந்தில் ஜடேஜாவின் கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

இறுதிவரை விளையாடிய கேப்டன் ரிஷப் பந்த் ஐபிஎல் -ன் தனது 10 வது அரைசத்தை 35 வது பந்தில் 3 பவுண்டரி 2 சிக்ஸர் என மொத்தம் 51ரன்களை பதிவு செய்தார்.  கடைசி ஓவர் முடிவில் டெல்லி கேபிடல்ஸ்  அணி  172 ரன்களுக்கு 5 விக்கெட்டை  இழந்தது.

சென்னை அணி 173 ரன்களை இலக்காக கொண்டு களத்தில் தனது தொடக்க வீரரான  ஃபாஃப்  டு பிளெசிஸின் முதல் ஓவரின் முதல் விக்கெட்டால் அதிருப்தியை ஏற்படுத்தியது. தொடர்ந்து வந்த ராபின் உத்தப்பா -ருதுராஜ் கெய்க்வாட்டும் ஜோடி தங்களது நேர்த்தியான ஆட்டத்தால் போட்டியை விறுவிறுப்பாக்கினர்.

இதில் 44வது பந்தில்  7 பவுண்டரி 2 சிக்ஸர் என மொத்தம் 63 ரன்களை குவித்த  ராபின் உத்தப்பா டாம் குர்ரான் வீசிய 13.3 ஓவரில் ஷ்ரேயஸ் ஐயர்  கேட்ச்சில் ஆட்டமிழந்தார். எனினும் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்த ருதுராஜ்  அரைசதம் கடந்து 50 வது பந்தில் 5 பவுண்டரி 2 சிக்ஸர் என மொத்தம் 70 ரன்களை சேர்த்த நிலையில் 18.1 ஓவரில் ஆவேஷ் கானின் கேட்ச்சில் ஆட்டமிழந்தார்.

2 பவுண்டரிளுடன் மொயீன் அலி 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக களம் கண்ட கேப்டன் தோனி 6 பந்துகளில்  3 பவுண்டரி 1 சிக்ஸர் என தனக்கே உரிதான பாணியில் ஆட்டத்தை அதிரடியாக முடித்து வைத்தார். இறுதியில் தனது இலக்கை சென்னை அணி 20 ஓவர்களில் 2 பந்துகள் மீதம் உள்ள நிலையில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றியைப் பெற்றது.

இதுவரை 8 முறை பிலே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள  தோனி தலைமையிலான சென்னை அணி  3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மீண்டும் ஒரு அபாரமான வெற்றியின் வாயிலாக சென்னை அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Be the first to comment on "ஐபிஎல் 2021 குவாலிஃபேயர்: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது."

Leave a comment

Your email address will not be published.


*