ஐபிஎல் 2021: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அபாரமாக வென்றது மும்பை இந்தியன்ஸ்….

www.indcricketnews.com-indian-cricket-news-016

ஷார்ஜா: ஐபிஎல் 2021 (அக்.5) ல் நடைபெற்ற தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் முப்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தினர்.  இதில் முப்பை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்து விளையாடியது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து கோல்டர் நைல் வீசிய பந்தில் அவுட் ஆனார். மறுமுனையில் விளையாடிய எவின் லூயிஸ் 24 ரன்களில் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

3வதாக களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் வெறு 3 ரன்கள் மட்டும் எடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 3 விக்கெட் முடிவில் 41 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில் அடுத்துவந்த டூ பேவும் 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

அவர் மட்டுமின்றி அடுத்து வந்த அனைத்து வீரர்களுமே மலமலவென்று விக்கெட் கொடுத்தனர். க்ளென் ஃபிலிப்ஸ் (4) ரன்களும், தெவாத்தியா (12) ரன்களிலும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்கள். இந்நிலையை கடைசிவரை  மாற்ற முடியவில்லை. பின்பு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் கோபால் , பும்ராவின் முதல் பந்தில் எட்ஜ் ஆகினார்.

கடைசியாக நம்பப்பட்ட டேவிட் மில்லர் 15 ரன்களில் ட lPW ஆனார். இவ்வாறு மோசமான விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 90 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மிகவும் வலுவான பவுலிங்கை வீசியது மும்பை அணி. ராஜஸ்தான் அணியின் கடைசி மேட்சில் சென்னை அணியை சிதறவிட்டது. எனவே நல்ல ஃபார்ம்மில் இருக்கிறார்கள் என நினைத்த நிலையில், இவ்வாறு ஒரு சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது சற்று ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. 

மிகவும் ஒரு எளிதான இலக்கைத்  துரத்த மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்க்கைத் துவங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய அதிரடி ஆட்ட நாயகன் ரோஹித் ஷர்மா தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடி 13 பந்துகளில் (22) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இதில் 2 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் அடங்கும். பிறகு விளையாடிய  சூர்யக் குமார் யாதவ் (13) ரன்களில் கேட்ச்அவுட் கொடுத்தார். இதனால் 2வது விக்கெட்டை இழந்த நிலையில் 56 ரன்களைத் தக்க வைத்திருந்தது மும்பை அணி. கடந்த 2 மேட்சில் விளையாடாத இஷான் கிஷன் இன்று களமிறங்கினார்.

இதனால் 8.2 ஓவரிலேயே 94 ரன்களைக் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது மும்பை அணி. இஷான் கிஷன் 25 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டத்தையே சிறப்பாக விளையாடி முடித்துள்ளார்.

Be the first to comment on "ஐபிஎல் 2021: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அபாரமாக வென்றது மும்பை இந்தியன்ஸ்…."

Leave a comment

Your email address will not be published.


*