ஐபிஎல் 2021:7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அபாரமாக வென்றது…

www.indcricketnews.com-indian-cricket-news-099

அபுதாபி: ஐபிஎல் 2021 தொடரில் (செப்.27) ல் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இதில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை துவங்கியது. தொடக்க வீரர்களான எவின் லெவிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கி விளையாடத் துவங்கினர்.  லெவிஸ் (6) ரன்கள் மட்டும் எடுத்து  கேட்சில் அவுட் ஆனார். இதன் பின் வந்த ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் (36) ரன்கள் விளாசி வெளியேறினார். இதில் 5 பவுண்டரிகளும் 1 சிக்ஸர்யும் உள்ளடங்கும். மறுபக்கம் அவுட்     ஆகாமல் விளையாடிய  கேப்டன் சஞ்சு சாம்சன் மிக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிறகு லிவிங்ஸ்டோன் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.  அதிரடியாக விளையாடி வந்த சாம்சன் கடைசி வரை ஆட்டமிலக்காமல் (70) ரன்கள் குவித்தார். இவ்வாறு  41 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.   மறுபக்கம் லோம்ரோர் சிறப்பாக கம்பெனி கொடுத்து விளையாடினர்.  ஆனால் அடுத்தடுத்து வந்த நபர்கள் மலமலவென எடுத்தார்கள். முடிவில், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்தது. சாம்சன் 57 பந்துகளில் 82 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.    புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்பிடித்துள்ள ஹைதராபாத் அணி

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கண்டிப்பாக வெற்றியை பதிவு செய்தால் தான் முன்னேற முடியும்.     இதையடுத்து களம் கண்ட கொல்கத்தா அணியினர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் விளையாட ஆரம்பித்தது.  ஓபனர் விருத்திமான் சாஹா 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து பிரியம் கார்க் கோல்டன் டக் அவுட் ஆனார். இருப்பினும் ஜேசன் ராய்    42 பந்துகளில் (60) ரன்கள் குவித்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் கேன் வில்லியன்சன் மற்றும்  அபிஷேக் ஷர்மா  ஆகியோர் பார்ட்னர்ஷிப் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார்கள். வில்லியம்சன் 41 பந்துகளில் (51) ரன்கள் குவித்து அதிரடிக்காட்டினார். அபிஷேக்கும் தனது பங்கிற்கு 16 பந்துகளில் (21) ரன்கள் விளாசினார்.

இதனால், ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களிலேயே தனது இலக்கை நெறுங்கிவிட்டது. தனது 18.3 ஓவரில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 167 ரன்கள் எடுத்து மாபெரும் வெற்றியை எளிதில் எட்டிப் பிடித்து விட்டது.   எனவே ராஜஸ்தான் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது.

இதன் மூலம், அந்த அணி ஐபிஎல் 2021 தொடரில், இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது.

Be the first to comment on "ஐபிஎல் 2021:7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அபாரமாக வென்றது…"

Leave a comment

Your email address will not be published.


*