டி 20 கிரிக்கெட் தொடர் – பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது இலங்கை

மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி, தொடரை 3-0 என கைப்பற்றியது.

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் இலங்கை அணி 2-0 என வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்றிரவு நடந்தது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. ஒஷாடா பெர்னாண்டோ 78 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.

ஆனால், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது.

சர்வதேச 20க்கு 20 போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியுடனான முழுமையான தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. லாஹுரில் நேற்றிரவு இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி, 13 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் ஓஷத பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியின்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெற்ற மூன்று 20க்கு 20 போட்டிகளிலும் வெற்றிபெற்று இலங்கை அணி தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது. 20க்கு 20 சர்வதேச கிரிக்கட் போட்டிகளில், தொடர் ஒன்றை இலங்கை அணி முழுமையாக கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது இலங்கை

இதேநேரம், பாகிஸ்தான அணி T20தொடர் ஒன்றை முழுமையாக இழந்த சந்தர்ப்பமும் இதுவாகும்.பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இலங்கை அணியின் மூத்த வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இளம் அணி அங்கு சென்று 20க்கு 20 தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "டி 20 கிரிக்கெட் தொடர் – பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது இலங்கை"

Leave a comment

Your email address will not be published.


*