தென்னாப்பிரிவுக்காவுக்கு எதிராக இன்று 2-ஆவது டெஸ்ட்

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

2-வது டெஸ்ட் புணேவில் வியாழன் முதல் தொடங்குகிறது. செய்தியாளர்களை இன்று சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

புள்ளிகள் பட்டியலைத் தயாரிக்க என்னைச் சொன்னால், வெளிநாட்டு டெஸ்ட் வெற்றிகளுக்கு இரு மடங்குப் புள்ளிகளை வழங்கப் பரிந்துரைப்பேன். முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு இதை அமல்படுத்தலாம். ஒவ்வொரு டெஸ்ட் வெற்றிகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படுவதால் டிராவுக்குப் பதிலாக வெற்றியை அடையவே அணிகள் விரும்பும். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு நல்லது. 

ரோஹித் சர்மாவைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டாம். அவர் தன் திறமையை நிரூபித்துவிட்டார். எனவே அவர் தனது பேட்டிங் திறமையை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்த அனுமதியுங்கள். வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களை அவர் எந்தளவுக்கு ரசித்து ஆடுகிறாரோ அதுபோல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடட்டும்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் புணேவில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ரோஹித் சா்மா- மயங்க் அகா்வால் கூட்டணியின் அதிரடியை இந்த ஆட்டத்திலும் எதிர்பாக்கலாம் கேப்டன் கோலி, புஜாரா, ரஹானே, ஹனுமா விகாரி என வலுவான பேட்டிங் வரிசையுடன் இந்தியா திகழ்கிறது. முகமது ஷமி, அஸ்வின் என பந்துவீச்சாளா்களுக்கும் பஞ்சமில்லை.

‘டெஸ்டில் குல்தீப் இடம்பெறாமல் போனதற்கு காரணம் என்ன என்பது அவருக்கு தெரியும்; முகமது ஷமிக்கு அழுத்தம் தர வேண்டியதில்லை. சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அபாரமாக பந்து வீசுகிறர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெளிநாட்டு மண்ணில் வெல்லும் அணிக்கு அளிக்கப்படும் புள்ளிகள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும்.

பிளெஸ்ஸிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்புடன் களம் இறங்கும்.

இந்தியாவில் அஸ்வின், ஜடேஜாவுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை அவர் அறிந்து வைத்துள்ளார்.

பிளெஸ்ஸிஸ் கூறுகையில், ‘முகமது ஷமியிடம் இருந்து தென்னாப்பிரிக்க இளம் பந்துவீச்சாளா்கள் சொந்த மண்ணில் எப்படி பந்துவீசுவது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.     

Be the first to comment on "தென்னாப்பிரிவுக்காவுக்கு எதிராக இன்று 2-ஆவது டெஸ்ட்"

Leave a comment

Your email address will not be published.


*