அமீரகம்: இந்திய மண்ணில் நடைபெற்று வந்த 14 வது ஐபிஎல் போட்டி கொரோனா காரணமாக தடைபட்டது. எனவே தற்பொழுது, இரண்டாவது பகுதி ஆட்டம் வரும் செப்டம்பர் மாதம் 19-ம் தேதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கவுள்ளது. போட்டிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அனைத்து ஏற்ப்பாடுகளும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.
ஆகையால் அனைத்து அணிகளும் தங்களது பயிற்ச்சியை அமீரகத்தில் உள்ள மைதானத்தில் துவங்கி கடின உழைப்பை மேற்க்கொண்டு வருகின்றனர். இதில் சென்னை “சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு பிறகு அனைவரையும் கவர்ந்த அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி உள்ளது”.
கேப்டன் விராட் கோலியின் சிறப்பான தலைமையின்கீழ் இந்த அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் பயிற்ச்சி ஆட்டத்தின்போது தேவ்தத் பட்டிக்கல் தலைமையில் ஒரு அணியும், ஹர்ஷல் பட்டேல் தலைமையில் மற்றொரு அணியுமாக பிரிந்து விளையாடினார்கள். கடினமாக நடந்த இந்தப் போட்டியில் சீனியர் வீரரான டிவில்லியர்ஸ் அனல் பறக்கும் 360 டிகிரி வெயிளிலும் கூட சதம் விளாசி அசித்தியுள்ளார். வயசு ஆனாலும் உங்களது ஸ்டைல் இன்னும் மாறவில்லை என்று இரசிகர்கள் இதை ட்ரெண்டிங் ஆகி வருகிறார்கள்.
இவர் அனைத்து வித சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஓய்வுக்கு பிறகு 4 மாத காலமாக எந்தவொரு போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். பல நாட்களுக்குப் பிறகு விளையாடினாலும் தனது ஃபார்மில் மாற்றம் ஏதும் இல்லை என நிறுபித்துக் காட்டியுள்ளார்.
இந்த பயிற்ச்சியின் ஆரம்பத்தில் 19 பந்துகளுக்கு 19 ரன்கள் மட்டும் எடுத்திருந்தாலும் அதன் பிறகு 46 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதில் 10 சிக்ஸர்களும் 4 பவுண்டரிகளும் அடங்கும். பயிற்ச்சி ஆட்டமாக இருந்தாலும் சதம் அடித்து தன்னை நிரூபித்துள்ளார். வரவிருக்கும் போட்டிகளில் விளையாட, தான் தயாராக உள்ளதாக கூறுவதுபோல் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்பொழுது ஸ்கோர் போர்டில் 3-ம் இடத்தில் உள்ளனர். இந்த அணியில் டிவில்லியர்ஸ் தவிர மேலும் சில முன்னணி வீரர்களான யுவேந்திர சாஹல், ஹசரங்கா, கெயில் ஜேமிசன், மற்றும் முகமது சிராஜ் போன்றோர்களும் நல்ல ஃபார்மில் உள்ளதாக கூறுகிறார்கள்.
எனவே மற்ற போட்டிகளைப் போல் அல்லாமல் இனிவரும் போட்டிகளில் பெங்களூரு அணி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
Be the first to comment on "IPL 2021: பயிற்ச்சி ஆட்டத்தில் சதம் அடித்து விலாசிய ஏபி டிவில்லியர்ஸ்…"