இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமனம் – ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி…

www.indcricketnews.com-indian-cricket-news-038

20 ஓவர் உலக கோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி: 16 அணிகள் பங்கேற்கும் 7ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம்  17 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 14 ஆம் தேதி வரையில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கிறது..இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி விபரத்தைக் குறித்து வெளியிட்டிருக்கும் பிசிசிஐ, யாரும் எதிர்பார்க்காத வகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலில் இருந்து ஓய்வை அறிவித்த முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவார் என அறிவித்துள்ளது. இது திடீர் தகவலாக இருந்தாலும் அனைவருக்கும் மகிழ்ச்சித் தகவலாக அமைந்துள்ளது.

2007 ஆம் ஆண்டு நடந்த முதலாவது 20 ஓவர் உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை இந்திய அணிக்கு வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக  வலம் வந்தவர் டோனி ஆவார்.   இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச அளவில் சிறந்த கேப்டனாக விளங்கினாலும், தோனியின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை என்பது தான் உண்மை . அவரது தலைமையில் இந்திய அணி இதுவரையில் ஐஐசி கோப்பை எதையும் வெற்றது கிடையாது. இந்நிலையில் வெற்றிகளை வசப்படுத்துவதில் சிறப்பான வியூகம், இக்கட்டான தருணத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் கைதேர்ந்தவரான தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தோனி நியமனம் குறித்து விளக்கம் அளித்திருக்கும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா,  உயர்மட்ட ஆலோசனையில் தோனியின் பெயரை பரிந்துரை செய்ததும், அனைவரும் ஒரே பதிலாக சம்மதத்தை தெரிவித்தார்கள் எனவும் செய்து வெளியாகியுள்ளது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமனம் செய்யப்பட்டதை அவரது ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். 

சமூக வலைதளங்களில் வாத்தி கம்மிங்…  இசையுடன் உற்சாகத்தை வெளிப்படுத்தி போஸ்ட் போட்டு. வருகின்றனர். தோனியின் வருகையை  இந்திய அணி, உலக கோப்பையை வென்றது போன்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தோனியின் சிறந்த முன் அனுபவங்கள் இந்திய அணிக்கு வெற்றிக்கு வழிவகுக்கு மென எதிர்பார்க்கப்படுகிறது. கோலிக்கு சரியாக முடிவு எடுக்க தெரியாது என தோனியை சேர்க்கில்லை. அவரது ஆலோசனைகளும் முன் அனுபவமும் இருந்தால் எளிதில் வெல்லமுடியும் என்பதற்காகத்தான்

Be the first to comment on "இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமனம் – ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி…"

Leave a comment

Your email address will not be published.


*