லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 466 ரன்கள்
சேர்த்துள்ளது. ரஹானே தவிர, ஒட்டுமொத்த வீரர்களும் 2ம் இன்னிங்சில் நன்றாகவே செயல்பட்டார்கள். ரவீந்திர ஜடேஜா க்றிஸ் வோக்ஸ் ஓவரில் 17 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி அவுட் ஆனார். பிறகு வந்த ரஹானே 8 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார் அவரும் க்றிஸ் வோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ தான். பிறகு கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி வந்த கோலி 44 ரன்களில் மொயீன் அலி ஓவரில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆக்கப்பட்டார். பிறகு பண்ட் – ஷர்துல் தாகூர் கூட்டணி பார்ட்னர்ஷிப் அமைக்க முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்திருந்த ஷர்துல், இந்த இரண்டாம் இன்னிங்ஸிலும் 60 பந்துகளில் அரை சதம் விளாசினார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 8வது விக்கெட்டுக்கு களமிறங்கி ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த 6 வது வீரர் எனும் சாதனையை ஷர்துல் படைத்திருக்கிறார். இதற்கு முன், ஹர்பஜன் சிங் மற்றும் ரிதிமான் சாஹா ஆகியோர் 8வது பேட்ஸ்மேனாக களமிறங்கி, இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்திருக்கிறார்கள். உலகளவில் 6வது வீரர் என்ற பெருமையையும், இந்திய அளவில் 3வது வீரர் எனும் பெருமையையும் அடைந்துள்ளா ர் ஷர்துல் பிறகு, ஜோ ரூட் ஓவரில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஷர்துல் அவுட் ஆக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, இந்த டெஸ்ட் தொடரில் முதல் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட், மொயீன் அலி ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பிறகு பும்ரா – உமேஷ் பார்ட்னர்ஷிப் அமைக்க பும்ரா 24 ரன்களும், உமேஷ் 25 ரன்களும் எடுத்து, மேற்கொண்டு இந்தியாவுக்கு 50 ரன்கள் பெற்றுக் கொடுத்தனர் பிறகு, ஒருவழியாக இந்திய அணி 466 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம், இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தற்போது பேட்டிங் செய்து வரும் நிலையில், தொடர்ந்து, இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தை துவங்கிய இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை கடந்து விளையாடுகிறது. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து வெற்றிப் பெற இன்னும் 291 ரன்கள் தேவை.
Be the first to comment on "இந்தியா VS இங்கிலாந்து: 4வது டெஸ்ட் 4 வது நாள் ஆட்ட நிலவரம்…."