4வது டெஸ்ட்: இளம் பெங்களூரு பவுலர் அணியில் சேர்ப்பு…

www.indcricketnews.com-indian-cricket-news-007

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் (செப்.2) நடைபெறவுள்ளது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருப்பதால், இந்த போட்டி மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளது.  இந்நிலையில், இந்திய நான்காவது டெஸ்ட் போட்டிக்கான முழு இந்திய அணி வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. 22 வீரர்கள் இந்த பட்டியலில் உள்ளனர். ஆனால், இதில் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பவர் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆவார். இந்த பெங்களூரு வீரர் ரிசர்வ் வீரராக இங்கிலாந்து தொடரில் இடம் பெற்றுள்ளார்.

இதில் எந்த வேகப்பந்து வீச்சாளரையும் மாற்றி, அவருக்கு பதில் இவரை சேர்க்கவில்லை பும்ரா, இஷாந்த், ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் என்று அனைத்து பவுலர்களும் அணியில் இருக்க, 22வது வீரராக பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார். ஃபார்மில் இல்லாத இஷாந்த் ஷர்மா நான்காவது போட்டியில் நிச்சயம் நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அவருக்கு பதில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படலாம் என்றே கூறப்பட்டது.

ஒருவேளை ஜடேஜா காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டால், இந்திய அணி இஷாந்த் ஷர்மாவை நீக்கிவிட்டு, அவருக்கு பதில் அஷ்வினை சேர்த்து 3 ஃபாஸ்ட் மற்றும் 2 ஸ்பின்னர்கள் கொண்டு களமிறங்கலாம் என்றே கணிக்கப்பட்டது. அப்படி ஜடேஜா உடல் தகுதி பெறவில்லை என்றால், அவருக்கு பதில் அஷ்வின் சேர்க்கப்பட்டு, இஷாந்துக்கு பதில் ஷர்துல் சேர்க்கப்படுவார் என்றே தகவல்கள் கிடைத்தது ஆனால், இப்போது சம்பந்தமே இல்லாமல், இத்தனை ஃபாஸ்ட் பவுலர்கள் வெயிட்டிங்கில் இருக்கும் போது, பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குழப்பமாகவே உள்ளது. இந்திய அணி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று, All-India Senior Selection Committee பிரசித் கிருஷ்ணாவை அணியில் சேர்த்துள்ளனர். பிசிசிஐ வெளியிட்டுள்ள, நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் முழு பட்டியல், “ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ரிதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Be the first to comment on "4வது டெஸ்ட்: இளம் பெங்களூரு பவுலர் அணியில் சேர்ப்பு…"

Leave a comment

Your email address will not be published.


*