எந்த அணியையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். T20 உலகக் கோப்பை குறித்து – கெளதம் கம்பீரின் கருத்து…

www.indcricketnews.com-indian-cricket-news-072

மும்பை: இந்த வருடம் இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர், கொரோனா காரணமாக அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் டி20 உலகக் கோப்பைத் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கவுள்ளனர்.

இத்தொடர் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறும். முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் உள்ளது. இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதவுள்ளனர். இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதியடையும்.

இதில், குரூப் ‘ஏ’வில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா அணிகளும், குரூப் ‘பி’-யில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, பாப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும் மோதும். ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் இரண்டாவது சுற்றுக்கு நேரடியாகத் தகுதி செய்யப்பட்டார்கள். முதல் சுற்றில் வெற்றிபெற்ற 4 அணிகளும் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்பார்கள்.

இதில், இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி குறித்து கெளதம் கம்பீர் கூறிகையில் அதில், ‘இந்தியாவுடன் முதல் போட்டியில் மோதுவதால், பாகிஸ்தானிடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும், ஆனால், இப்போது உள்ள சூழலில், பாகிஸ்தானை விட இந்திய வலிமையாக உள்ளது.

டி20 வடிவ கிரிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் யாரையும் வெல்ல முடியும், ஏனெனில் இது மிகவும் தனிப்பட்ட  விளையாட்டாகும். இங்கு நாம் எந்த அணியையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது உதாரணமாக, ஆப்கானிஸ்தானை நீங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். ரஷித் கான் போன்றவர்கள் தொடரில் மிகப்பெரிய குழப்பங்களை உருவாக்குவார்கள் பாகிஸ்தானுடனும் அதே நிலைமை தான் அன்றைய தினம் சிறப்பானதாக இருந்தால், நிச்சயம் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்புண்டு.

இந்த டி20 உலகக் கோப்பையில் ஒரு அணியைப் பற்றி நீங்கள் பேச விரும்பினால், அது ஆப்கானிஸ்தானாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புவேன் அவர்கள் ரஷித் கான், முஜீப் மற்றும் முகமது நபி போன்ற வீரர்களைப் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களை சாதாரண வீரர்களாக எடுத்துக்கொள்ள கூடாது. கடினமாக போராட வேண்டும். பல அணிகளுக்கு ஆப்கானிஸ்தான் சேதாரத்தை ஏற்படுத்தலாம்’ என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "எந்த அணியையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். T20 உலகக் கோப்பை குறித்து – கெளதம் கம்பீரின் கருத்து…"

Leave a comment

Your email address will not be published.


*