ஜப்பான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோக்கியோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜான் மில்மானை (ஆஸ்திரேலியா) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். ஜப்பான் ஓபனில் அறிமுகம் ஆன முதலாவது ஆண்டிலேயே பிரமாதப்படுத்தியுள்ள ஜோகோவிச்சுக்கு ரூ.2¾ கோடி பரிசுத்தொகையும், 500 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. மொத்தத்தில் இது அவரது 76-வது சர்வதேச பட்டமாகும்.
இடது தோள்பட்டை காயம் காரணமாக யுஎஸ் ஓபனில் இருந்து வெளியேறிய பின்னர் இது அவரது முதல் போட்டியாகும்.
இதே போல் பீஜிங்கில் நடந்த சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்டியும் (ஆஸ்திரேலியா), 4-ம் நிலை வீராங்கனை நவோமி ஒசாகாவும் (ஜப்பான்) பலப்பரீட்சையில் இறங்கினர்.
1 மணி 50 நிமிடங்கள் நீடித்த மோதலில் ஒசாகா 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றார். இது 5-வது சர்வதேச பட்டமாகும். வாகை சூடிய அவர் ரூ.10 கோடி பரிசுத்தொகையையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளையும் பெற்றார். இதன் ஆண்கள் பிரிவில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்டெபானோஸ் சிட்சிபாசை (கிரீஸ்) போராடி வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.
நவீன காலத்தில், வெற்றிகரமான மற்றும் சிறந்த ஆடவர் டென்னிஸ் வீரர்கள் உடல்தசை மிக்கவர்களாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
40 ஆண்டுகளில், மெலிந்த மற்றும் உடல் உறுதி மிக்கவர்களாக இருந்த டென்னிஸ் விளையாட்டின் ஆண்கள் பிரிவு சாம்பியன்கள், வலுவுள்ள உடல்தசை பயிற்சி பிரியர்களாக வடிவம் எடுத்திருப்பதாக, வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழக இரு நபர் ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
வலிமையான டென்னிஸ் ஷாட்களை விளையாட திரளான உடலமைப்பு ஒரு கூடுதல் வாய்ப்பினை தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரட்டையர் ஆட்டத்தில் பங்கேற்பதன் மூலம் வாரத்தைத் தொடங்கிய ஜோகோவிச், வாரம் முன்னேறும்போது தனது செயல்திறனை தீவிரப்படுத்தினார், உலக நம்பர் 15 டேவிட் கோஃபின் உட்பட தனது எதிரிகளை ஒருபோதும் கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்த அனுமதிக்கவில்லை.
இந்தியா – பாகிஸ்தான் டேவிஸ் கோப்பை மோதல் முன்னதாக செப்டம்பர் 14 – 15 அன்று நடைபெற இருப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த தொடரை தள்ளி வைத்தது சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு.
Be the first to comment on "சர்வதேச டென்னிஸ்: ஜோகோவிச், ஒசாகா ‘சாம்பியன்’"