20 ஓவர் உலக கோப்பை: இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் தேதியை ஐசிசி வாரியம் அறிவித்ததுள்ளது..

www.indcricketnews.com-indian-cricket-news-064

துபாய்: 7-வது 20 ஒவர் உலக கோப்பை போட்டி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்திருக்கவேண்டும். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த போட்டி நடைபெறவில்லை.

அடுத்த ஆண்டு (2022) அதே இடத்தில் நடைபெறும்.இந்தியாவில் இந்த போட்டியை நடத்த முதலில் திட்டமிடப்பட்டது ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதிவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய், அபுதாபி, சார்ஜா) மற்றும் ஓமனில் நடக்கவிருக்கிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கவுள்ளன. மொத்தம் 45 போட்டிகள் நடைபெறும்.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல் சுற்றில் (தகுதி சுற்று) 8 அணிகள் விளையாடும், இதில் இருந்து 4 அணிகள் 2-வது ரவுண்டான ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேற்றப்படுவார்கள். இந்தியா உள்பட 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடவுள்ளன.முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளார்கள்.ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளும், பி பிரிவில் வங்காளதேசம், ஓமன், ஸ்காட்லாந்து, பப்புவா நியூகுனியா அணிகள் ஆகிய நாடுகளும் உள்ளது.அக்டோபர் 17-ந் தேதி ஓமனில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஓமன்- பப்புவா நியூகுனியா மோதவுள்ளன.

மற்றொரு போட்டியில் வங்காளதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றது. 22-ந் தேதியுடன் முதல் சுற்று ஆட்டம் முடிவடையும். 2 பிரிவுகளில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். நேற்று வெளியிட்ட போட்டி அட்டவணைப்படி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 24-ந் தேதி மோதவுள்ள. இந்த ஆட்டம் துபாயில் நடக்கிறது.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு  நடைபெறும். இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்துடன் 31-ந் தேதியும், 3-வது போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் நவம்பர் 3-ந் தேதியும் மோதவுள்ளது. தகுதி சுற்று அணிகளை இந்தியா நவம்பர் 5 மற்றும் 8-ந் தேதிகளில் எதிர்கொள்ளவிருக்கிறது.

குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட்இன்டீஸ் ஆகிய அணிகளும் தகுதி சுற்றில் இருந்து 2 அணிகளும் (ஏ-1, பி-2) இடம்பிடித்துள்ளனர்.நவம்பர் 8-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. முடிவில் 2 பிரிவில் இருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு செல்லவுள்ளது. 10 மற்றும் 11-ந் தேதிகளில் அரை இறுதி நடக்கும்.இறுதிப்போட்டி நவம்பர் 14-ந் தேதி துபாயில் நடக்கவுள்ளது.

Be the first to comment on "20 ஓவர் உலக கோப்பை: இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் தேதியை ஐசிசி வாரியம் அறிவித்ததுள்ளது.."

Leave a comment

Your email address will not be published.


*