கிறிஸ்ட்சர்ச்: T20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 17 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கிறது. இந்த T20 உலகக் கோப்பையில் கலந்து கொள்ள இருக்கும் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தலைமையிலான 15 வீரர்கள் அடங்கிய குழு பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த உலக கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு, இதற்கு முன்னதாக நடைபெற இருக்கும் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் சுற்றுப்பயணங்களில் இருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் பல மூத்த வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் நியூசிலாந்து அணி T20 உலகக் கோப்பையில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்கள்.
மேலும் அடுத்த நான்கு மாதங்களில் உள்ள போட்டிகளை கையாள 32 பேர் கொண்ட அணியில் தங்கள் உலகக் கோப்பைக்கான வரிசையை நியூசிலாந்து அணியை தேர்வு செய்துள்ளது . இது தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் தலைமை நிர்வாகி டேவிட் ஒயிட் கூறுகையில், மாறிவரும் காலங்களில் விளையாட்டு உத்திகளும் மாறவேண்டும். அதனால் கொரோனா தொற்று சமயத்தில் வீரர்களின் நலனையும் தொழில்முறை விளையாட்டையும் நிர்வகிப்பது முக்கியமானதாகும் எனக் கூறிகிறார்.
இதனிடையே கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இந்திய பிரீமியர் லீக்கில் (IPL ) போட்டிகளில் பங்கேற்கும் நியூசிலாந்து வீரர்கள், செப்டம்பரில் மீண்டும் துவங்க உள்ள போட்டிகளில் தங்களது அணிக்கு திரும்பவிருக்கிறார்கள்.
மேலும் அக்டோபர் 17 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கும் T 20 உலகக் கோப்பையில் வில்லியம்சன் கேப்டனாக இணைந்திருப்பதால், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் போட்டிகளில் டாம் லாதம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இடையில் ராஸ் டெய்லர், இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் சுற்றுப் பயணத்திற்காக நியூசிலாந்தில் இருப்பார்.
T20 உலகக் கோப்பை மற்றும் இந்தியாவுடனான 20-20 பட்டியல்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்டல், ட்ரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, லோக்கி பெர்குசன், மார்ட்டின் கப்தில், கைல் ஜேமிசன், டாரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட் சாண்ட்னர், டிம் சீஃபர்ட், இஷ் சோதி, டிம் சவுதி உள்ளனர்.பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஒருநாள் போட்டி பட்டியல்: டாம் லாதம் (கேப்டன்), ஃபின் ஆலன், ஹமிஷ் பென்னட், டாம் ப்ளண்டெல், டக் ப்ரேஸ்வெல், கொலின் டி கிராண்ட்ஹோம், ஜேக்கப் டஃபி, மாட் ஹென்றி (ஒருநாள் மட்டும்), ஸ்காட் குக்கலீஜ்ன், கோல் மெக்கோன்சி, ஹென்றி நிக்கோலஸ், அஜாஸ் பட்டேல், ரசின் ரவீந்திரா, பென் சியர்ஸ் (டி 20 மட்டும்), பிளேயர் டிக்னர், வில் யங் ஆகியோர் உள்ளனர்.
Be the first to comment on "T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது…"