நாட்டிங்கம்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, நாட்டிங்கமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்கள்.
இதில், ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே பும்ரா விக்கெட்டை எடுத்தார். ரோரி பர்ன்ஸ் க்ளீன் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதனால், இங்கிலாந்து ரன் கணக்கை தொடங்காமலேயே தனது முதல் விக்கெட்டை இழந்தார்கள்.
பிறகு முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் பந்து வீச்சில், சிராஜ் ஓவரில் க்ராலே (27) ரன்களில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேற்றப்பட்டார். உணவு இடைவேளைக்கு பிறகு, புஜாரா போல ஸ்ட்ராங் ஃபவுண்டேஷன் போட்டு விளையாடி வந்த சிப்லே, ஷமி ஓவரில் வெளியேறினார்.
இதன் பிறகு களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ, ரூட்டுடன் இணைந்து ஓரளவு பாஸிட்டிவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால், அவரை (29) ரன்களில் ஷமி எல்பிடபிள்யூ செய்ய, இதன் பிறகு இங்கிலாந்து விக்கெட்டுகள் மளமளவென விழுந்தது.
டேனியல் லாரன்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ரன் ஏதும் எடுக்காமலேயே அவுட் ஆனார்கள். இடையில் சாம் கர்ரன் மட்டும் (27) ரன்கள் எடுத்து தாக்குப்பிடிக்க, ஓலே ராபின்சன் (0), ஸ்டூவர்ட் பிராட் (4), ஜேம்ஸ் ஆண்டர்ஸன் (1) என்று அடுத்தடுத்து அவுட்டாக இங்கிலாந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கப்பட்டது.
இங்கிலாந்தை 183 ரன்களுக்கு கட்டுப்படுத்தினாலும், இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இப்போட்டியில் தாக்குப்பிடிக்க இயலும். குறைந்தது முதல் இன்னிங்ஸில் 350 – 380 ரன்கள் வரை அடித்துவிட்டால், இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புக்கூறுகள் உள்ளது.
இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் தன்னம்பிக்கையோடு களமிறங்கியுள்ளது. ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் தொடக்க வீரர்களாக விளையாடுகின்றனர். கடைசி ஒருமணி நேர ஆட்டம் மீதமிருந்ததால், எப்படியாவது ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து பவுலர்கள் கடுமையாக முயற்சித்தார்கள்.
ஆனால், ரோஹித், ராகுல் இருவரும் மிக நேர்த்தியாக விளையாடியதால் விக்கெட் எடுக்க முடியவில்லை. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி (21) ரன்களுடன் இருக்கிறது. இருவரும் தலா 9 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள்.
இந்தியா சிறப்பாக விளையாடி தொடரைக் கைப்பற்றுமென அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதில் கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி பல சாதனைகளைப் படைப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Be the first to comment on "India vs England: முதல் நாள் போட்டியில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து…"