India vs Srilanka 2nd T20: க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதியானதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது…

கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், கடந்த ஞாயிறன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய அணி வென்றது.

இந்நிலையில், நேற்று (ஜுலை.27) இரண்டாவது டி20 போட்டி கொழும்புவில் இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில், முதல் டி20 போட்டியில் கலந்து கொண்டார் க்ருனால் பாண்ட்யா. இந்தியா, இலங்கை 2வது டி20 போட்டி நேற்று நடைபெறவிருந்த நிலையில், இந்திய வீரர் க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நேற்றைய 2-ம் ஆட்டத்திற்காக காத்திருந்த அனைவருக்கும் நிச்சயம் இது மிகவும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. இருப்பினும், இந்திய வீரர் க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று தற்போது உறுதியானது என ஏஎன்ஐ செய்தித்தளம் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. இதனால், இரு அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து நேற்று நடைபெறவிருந்த 2வது டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இது இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் அதிர்ச்சியாக இருந்தது. வீரர்கள் கடுமையான பயோ-பபுள் விதிமுறைகளில் வைக்கப்பட்டிருந்தும்  அதையும் மீறி க்ருனால் பாண்ட்யாவுக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், நேற்று நடைபெறவிருந்த போட்டி இன்று (ஜுலை 28) ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 2வது டி20 போட்டி ஜுலை 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து வீரர்களுக்கும் RT-PCR சோதனை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருக்கிறார்கள்.

இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவெனில், வேறு எந்த வீரருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் தான் இன்று போட்டி  நடைபெறும் எனவும் மாறாக, வேறு யாருக்காவது கொரோனா கன்ஃபார்ம் ஆனது என்றால், தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.

கொரோனா நெறிமுறைப்படி, க்ருனால் பாண்ட்யாவின் அருகாமையில் இருந்த 8 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் அவர்களில் பிருத்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவும் அடங்குவர். ஒருவேளை பிருத்வி  ஷா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால்,  இங்கிலாந்தில் விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பது மற்றொரு வேதனைக்குறிய செய்தியாகும்.

Be the first to comment on "India vs Srilanka 2nd T20: க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதியானதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது…"

Leave a comment

Your email address will not be published.


*