சிங்கப்பூர் அணிக்கு எதிரான டி-20யில் வரலாற்று சதம் விளாசிய நேபாள கேப்டன் பராஸ் காத்கா, இந்தியாவின் கோலி, ஸ்மித் , கெயில், ஆகியோரின் சாதனையை தகர்த்தார்.
சிங்கப்பூரில் ஜிம்பாப்வே, நேபாளம், சிங்கப்பூர் அணிகள் மோதும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி, நேபாள அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இத்தொடரின் இரண்டாவது போட்டியில் சிங்கப்பூர் , நேபாளம் அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற சிங்கப்பூர் அணி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சிங்கப்பூர் அணிக்கு கேப்டன் டிம் டேவிட் (64*) அரைசதம் அடித்து கைகொடுக்க, சிங்கப்பூர் அணி 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய நேபாள அணிக்கு துவக்க வீரர் இஷான் பாண்டே (5) ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் பராஸ் காத்கா, ஆரிப் ஷேக் அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிங்கப்பூர் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த காத்கா, 52 பந்தில் 9 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என 106 ரன்கள் அடித்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தார். இவருக்கு ஷேக் (39*) நல்ல கம்பெனி கொடுத்தார்.
இதையடுத்து நேபாளம் அணி 16 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 49 பந்தில் சதம் விளாசிய காத்கா, டி-20 அரங்கில் 4வது அதிவேக சதம் அடித்த ஆசிய கேப்டன் என்ற பெருஐ பெற்றார்.
தவிர, ஷேசிங்கின் போது அதிகரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் பராஸ் முதலிடம் பிடித்தார். முன்னதாக நெதர்லாந்தின் பீட்டர் (96) இந்த சாதனை படைத்திருந்தார். பீட்டரின் சாதனையை வெறும் 12 நாட்கள் வித்தியாசத்தில் பராஸ் தூள் தூளாக்கினார்.
அந்த அணியின் கேப்டன் டிம் டேவிட்டின் (44 பந்துகளில் 64 ரன்கள்) அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் 151 ரன்களை எடுத்தது.
152 ரன்கள் வெற்றி இலக்குடன் நேபாள அணியின் தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் பரஸ் கட்கா மற்றும் ஆரிஃப் ஷேக் ஆகியோர் களமிறங்கினர்.
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்.
இப்போட்டியில் நேபாள அணிக்காக இரண்டாவது விக்கெட்டுக்கு கேப்டன் பராஸ் காத்கா, ஷேக் ஆகியோ 145 ரன்கள் சேர்த்தனர்.
Be the first to comment on "விராட் கோஹ்லி சாதனையை தகர்த்தெறிந்த இளம் கிரிக்கெட் வீரர் நேபாள கேப்டன் பராஸ் காத்கா"