இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா, இந்திய அணிக்காக 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய தயார் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய கிரிக்கெட் அணி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நான்காவது
இடத்திற்கு நிலையான வீரரை கண்டுபிடிக்க முடியாமல் தத்தளித்து வருகிறது.
தற்போது ரிஷப் பந்த் களம் இறங்குகிறார். ரிஷப் பந்தும் எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்கவில்லை.
இந்நிலையில் நான்காவது இடத்தில் என்னால் களம் இறங்கி விளையாட முடியும் என்று சுரேஷ்
ரெய்னா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘என்னால் இந்திய அணிக்காக 4-வது இடத்தில் களம் இறங்கி விளையாட முடியும். அந்த இடத்தில் நான் ஏற்கனவே களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
அதன்பிறகு, இப்போது மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ள சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டியில், “இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க கடந்த இரு ஆண்டுகளாக மிகக் கடுமையான உழைப்பை கொட்டியிருக்கிறேன். இப்போது மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்திருப்பது, முதல் முறையாக வாய்ப்பு கிடைத்ததை போன்ற உணர்வைத் தருகிறது.
நான் எப்போதும் நேர்மறையாக சிந்திப்பவன். அணிக்கு திரும்புவதில் அதிக வேட்கை கொண்டிருந்த எனக்கு மீண்டும் இடம் கிடைப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நான் பயிற்சியில் ஈடுபடும் போதும், இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைக்கும் அந்த ஒரு தருணத்தை மட்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதில், நீண்ட நாட்களுக்குப் பிறகு சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக களம் இறங்கவுள்ளார். கடந்த 2015ல் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய ரெய்னா, கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டி20 போட்டியை ஆடியிருந்தார். இதில், 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
அதன்பிறகு, இப்போது மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ள சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டியில், “இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க கடந்த இரு ஆண்டுகளாக மிகக் கடுமையான உழைப்பை கொட்டியிருக்கிறேன். இப்போது மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்திருப்பது, முதல் முறையாக வாய்ப்பு கிடைத்ததை போன்ற உணர்வைத் தருகிறது.
Be the first to comment on "என்னால் 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய முடியும்: சுரேஷ் ரெய்னா"