உலகின் No.1 பேட்ஸ்மேன், ‘இந்திய வீரர்தான்’…பௌலர்களுக்கு கை, கால் உதறும்: பட் புகழாரம்!

உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர் இந்திய அணியில்தான் இருக்கிறார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் பேசியுள்ளார்.

இந்திய அணிக்காகச் சிறப்பாக விளையாடிய வீரர்கள் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் விராட் கோலியின் பெயர் டாப் 3 இடங்களில் இருக்க அதிக வாய்ப்புள்ளது. அந்த அளவிற்கு ரன்களை குவித்து வருகிறார். 197, 1980ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்காக சுனில் கவாஸ்கர் சிறப்பாக விளையாடி வந்தார். அதேபோல் 1990, 2000ஆம் ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் முகமாக இருந்து வந்தார். தற்போது விராட் கோலி. இவர் இதுவரை 70 சதங்கள் விளாசியுள்ளார். சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்க இவரால் மட்டுமே முடியும் என கிரிக்கெட் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். இந்த அளவிற்கு அசால்ட்டாக ரன்களை குவித்து வருகிறார்.

2020ஆம் ஆண்டில் இவர் ஒரு சதம் கூட எடுக்கவில்லை. தற்போது 2021ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களிலும் கோலி, ஒரு சதம் கூட எடுக்கவில்லை. இருப்பினும், பல போட்டிகளில் மேட்ச் வின்னராக இருந்துள்ளார். இவரின் ரன் அடிக்கும் வேகத்திலும் தொய்வு இல்லாமல் இருக்கிறது.

இவர் குறித்து தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் சல்மான் பட், தற்போதைய காலகட்டத்தில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்றால் அது விராட் கோலிதான் எனத் தெரிவித்துள்ளார்.

“தற்போதைய காலகட்டத்தில் மூன்றுவகை கிரிக்கெட்டிலும் சம்பவம் செய்பவர் என்றால் அது விராட் கோலிதான். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவரின் அதிரடி காரணமாக இந்திய அணி வெற்றிகளைக் குவித்து வருகிறது. கடந்த ஆண்டு விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இருப்பினும், பல பேட்டிகளில் மேட்ச் வின்னராக இருந்தார். அவர் இனி வரும் போட்டிகளிலும் அதிரடி காட்டுவார் என நம்புகிறேன்” என சல்மான் பட் புகழ்ந்து பேசினார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 8000, 9000, 10000, 11000, 12000 ரன்களை கடந்த முதல் வீரராக கோலி திகழ்கிறார். மேலும் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய பேட்ஸ்மேன்களில், கோஹ்லி சிறந்த டெஸ்ட் மதிப்பீடு (937 புள்ளிகள்), ஒருநாள் மதிப்பீடு (911 புள்ளிகள்) மற்றும் டி20 ஐ மதிப்பீடு (897 புள்ளிகள்) டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி சராசரியாக 52.37, ஒருநாள் போட்டிகளில் 59.07, டி 20 போட்டிகளில் 52.65 ஆகியவற்றைக் கொண்டுள்ளார்.

Be the first to comment on "உலகின் No.1 பேட்ஸ்மேன், ‘இந்திய வீரர்தான்’…பௌலர்களுக்கு கை, கால் உதறும்: பட் புகழாரம்!"

Leave a comment

Your email address will not be published.


*