இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஒருவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மிகவும் மோசமாக உள்ளது. தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கு மேல் இருந்த நிலையில் தற்போது அது 2 லட்சத்திற்கு கீழ் சென்றுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் குறையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவானது பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல், சினிமா மற்றும் விளையாட்டு பிரமுகர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கும் அறிகுகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஐபிஎல் 14ஆவது சீசன் நடைபெற்று வந்த நிலையில் வீரர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனால் அத்தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய அணியின் நட்சத்திர பவுலர் புவனேஷ்வர் குமாரின் தந்தை கடந்த மாதம் (மே) 20ம் தேதி உயிரிழந்தார். இந்த சோகத்தில் இருந்து அவரின் குடும்பத்தினர் மீளாத சூழலில் அதற்கு அடுத்த நாளே புவவனேஷ்வர் குமாரின் தாயாருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர் ஆனால் முடிவு நெகட்டிவ் என்று வந்தது.
இந்நிலையில் புவனேஷ்வர் குமார் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. புவனேஷ்வர் குமார் தாயாருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்ததையடுத்து கொரோனா அறிகுறிகள் உருவானதாகத் தெரிகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை செல்லும் இந்திய அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
ஆனால் புவனேஷ்வர் குமாருக்கு ஒருவேளை கொரோனா உறுதியானால் இலங்கைக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்பது கடினமாகும். 31 வயதாகும் புவனேஷ்வர், அடுத்தடுத்து காயத்தால் பாதிக்கப்பட்டதால் கடந்த 2018ம் பிறகு இதுவரை ஒரு டெஸ்டில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வபோது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. அடுத்து வரக்கூடிய டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு பெற வேண்டும் என்றால் புவனேஷ்வர் குமார் கண்டிப்பாக இலங்கை தொடரில் விளையாடியே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் உருவாகியுள்ளது.
தற்போது புவனேஷ்வர் குமார், அவரது மனைவியும் மீரட்டில் உள்ள அவர்களது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். புவனேஷ்வர் குமாரின் தந்தை சமீபத்தில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "இந்திய வீரருக்கு கொரோனா அறிகுறி, இப்போதான் தந்தைய இழந்தாரு…அதுக்குள்ள இப்படியா!"