‘ஓயாம அடிச்சு விளையாடாத’ இங்கிலாந்து மோசம்: இளம் வீரரை எச்சரிக்கும் கபில் தேவ்!

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது நீ அடக்கி வாசிக்க வேண்டும் என இளம் வீரரை கபில் தேவ் எச்சரித்துள்ளார். இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை இங்கிலாந்து சௌதம்ப்டான் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட உள்ளது. இப்போட்டிகள் அக்டோபர் 4ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 14ஆம் தேதி நிறைவடையும். இதற்கான டிக்கெட் விற்பனை துவங்கிவிட்டது.

இந்நிலையில் இந்த சுற்றுப் பயணம் குறித்துப் பேசிய இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ், இளம் ரிஷப் பந்திற்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.

ரிஷப் பந்த், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இந்திய டெஸ்ட் அணிக்கு அறிமுகமானார். முதல் போட்டியிலிருந்தே பயமில்லாமல் பந்துகளை எதிர்கொண்டு பல ரிஷ்கி ஷாட்களை அசால்ட்டாக அடித்தார். அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இதே பாணியில் விளையாடினார். தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது. இதிலும் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவரின் ஆட்டம் குறித்துப் பேசிய கபில் தேவ், “ரிஷப் பந்த் அணிக்குள் வந்ததிலிருந்து முதிர்ச்சியுடன் விளையாடுகிறார். முன்னணி பௌலர்களை எதிர்கொண்டு கடினமான ஷாட்களை எல்லாம் சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணம். ஆனால், இங்கிலாந்தில் அப்படி விளையாட முடியாது. இங்கிருக்கும் காலநிலை வேறு. தொடர்ந்து அதிரடி காட்ட நினைத்தால் விரைவில் பெவிலியன் திரும்பும் நிலை ஏற்படும். இதனால், அவர் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “ரோஹித் ஷர்மாவும் இப்படிதான். அதிரடியாக விளையாட நினைத்து ஆட்டமிழந்து விடுவார். டெஸ்டை பொறுத்தவரை நிதானம்தான் முக்கியம். ரிஷப் பந்த் அதனை கடைப்பிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 இல் டெல்லி கேபிடல்ஸ் கேப்டனாக ஒரு அற்புதமான ஆட்டத்திற்குப் பிறகு, ரிஷாப் பந்த் வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வருகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா வெல்லும் பொருட்டு ரிஷாப் பந்த் சிறப்பாக செயல்படுவார் என்று கடும் எதிர்பார்ப்பு இருக்கும். மேலும் வரும் மாதங்களில் இந்தியா உண்மையில் வரலாற்றை உருவாக்க முடியும் என்று முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் நம்புகிறார்.

Be the first to comment on "‘ஓயாம அடிச்சு விளையாடாத’ இங்கிலாந்து மோசம்: இளம் வீரரை எச்சரிக்கும் கபில் தேவ்!"

Leave a comment

Your email address will not be published.


*