‘ஐபிஎலில் கொரோனா’ என்ன நடந்தது? கண்ணீர்விட்ட நியூசிலாந்து வீரர்: வைரலாகும் வீடியோ!

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃப்ரெட்டுக்கு கொரோனா உறுதியானது. அந்த சம்பவம் குறித்துப் பேசுகையில் கண்ணீர்விட்டார்.

ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மே 4ஆம் தேதி இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்று முடிந்துள்ளது. எஞ்சிய 31 போட்டிகளை டி20 உலகக் கோப்பை துவங்குவதற்கு முன்பு நடத்திமுடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், அனைத்து வெளிநாட்டு வீரர்களும் உடனடியாக இந்தியாவைவிட்டு புறப்பட்டனர். ஆனால், கொரோனா பாதித்த நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃப்ரெட் மட்டும் இந்தியாவில் தங்கிச் சிகிச்சைபெற்று, குணமடைந்த பிறகு நாடு திரும்பினார். இங்கிருந்து புறப்பட்டுச் சென்ற கடைசி வெளிநாட்டு வீரர் இவர்தான்.

தற்போது நியூசிலாந்து சென்றடைந்து தனிமை முகாமில் இருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய கொரோனா அனுபவங்கள் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் கண்ணீர்விட்டு அழுதார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“சிஎஸ்கே மேளாலர் என்னிடம் வந்து கொரோனா உறுதியானதற்கான சான்றிதழைக் காட்டினார். உலகம் சுற்றுவது நின்றுவிட்டதுபோல் உணர்ந்தேன். அடுத்த என்ன நடக்கப் போகிறதோ? என்பதை நினைத்துப் பயந்தேன். ஏதோ கெட்ட விஷயம் நடக்கப் போகிறது என என் மனது என்னிடம் சொன்னது. மிகவும் மோசமான நாட்கள் அது” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “நான் கொரோனாவிலிருந்து மீள்வதற்கு பிரண்டன் மெக்கெல்லம், ஸ்டீவன் ஃப்ளெம்மிங் போன்றவர்கள்தான் முக்கிய காரணம். அவர்கள் என்னிடம் வந்து ஆறுதலான வார்த்தைகளைக் கூறி பயத்தைக் குறைக்க முயன்றார்கள். அதேபோல், சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணி நிர்வாகமும் எனக்குப் பக்கபலமாக இருந்தது. முதல் சில நாட்கள் மோசமானதாக இருந்தது. அதன்பிறகு நம்பிக்கையுடன் இருந்ததால் குணமடைந்தேன்” எனத் தெரிவித்தார்.

அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்குத் திரும்புவதை இந்த அனுபவம் தடுக்கவில்லை என்று கூறினார், ஆனால் பேரழிவுகரமான இரண்டாவது அலைகளை இந்தியா வெல்ல முடியாவிட்டால் உலகப் போட்டி சந்தேகத்திற்குரியதாக இருக்கலாம்.

“உண்மையைச் சொல்வதானால், நான் அங்கு இருந்தபோது முழு நேரமும், பயோ-பப்ல் நன்றாக உணர்ந்தார் பாதுகாப்பாக உணர்ந்தார்,” என்று கூறினார்.

வைரஸுக்கு பாசிட்டிவ் சோதனை செய்த நான்கு கே.கே.ஆர் கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர். மற்றவர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், பிரசீத் கிருஷ்ணா ஆகியோர்.

Be the first to comment on "‘ஐபிஎலில் கொரோனா’ என்ன நடந்தது? கண்ணீர்விட்ட நியூசிலாந்து வீரர்: வைரலாகும் வீடியோ!"

Leave a comment

Your email address will not be published.


*