எனது இடத்திற்கான மாற்று வீரரைத் தயார் செய்துவிட்டுதான் ஓய்வுபெறுவேன் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர், ஐபிஎல் 14ஆவது சீசன் போன்றவற்றில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தார். இவர் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த பௌலராகவும் இருக்கிறார்.
இவர் தற்போது கொடுத்துள்ள ஒரு பேட்டியில் தான் விரைவில் ஓய்வுபெற வாய்ப்பிருக்கிறது. அதற்குள் எனது இடத்திற்கான மாற்று வீரரைத் தயார் செய்ய விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். “நான் பல வருடங்களாகச் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். இளம் வீரர்கள் என்னிடம் ஆலோசனை கேட்கும்போதெல்லாம் என்னால் முடிந்த அனைத்தையும் சொல்லிவிடுவேன். நான் எப்போது வேண்டுமென்றாலும் ஓய்வு பெற வாய்ப்புள்ளது. இதற்குள், எனது இடத்திற்கான மாற்று வீரரை உருவாக்க விரும்புகிறேன். இதற்காக, இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குத் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி வருகிறேன். ஓய்வு அறிவிப்பை வெளியிடும்போது இந்திய அணியும் எனக்கான மாற்று வீரரை தயார் நிலையில் வைத்திருக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றிகளைக் குவித்தது. அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ளது. தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.
இதுகுறித்து பேசிய ஷமி, “இந்திய அணி சமீப காலமாகவே டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடியுள்ளது. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அழுத்தங்கள் இன்றி விளையாட முடியும். தொடர் வெற்றிகளால் வீரர்களுக்கு மனவுறுதி அதிகரித்துள்ளது. இதனால், தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க முடியும்” எனத் தெரிவித்தார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. WTC இன் இறுதிப் போட்டியில் நுழைகிற இந்தியா, ஆஸ்திரேலியாவில் நடந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு அற்புதமான வெற்றியைப் பதிவு செய்ததால், இந்தியா நம்பிக்கையுடன் இருக்கும். இதனால், இந்தியா மீண்டும் சில அசாதாரண கிரிக்கெட்டை விளையாட முடியும் என்று கிரிக்கெட் உலகில் நிறைய நிபுணர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள்.
Be the first to comment on "நான் ரிட்டையர்ட் ஆகிடுவேன், இளம் வீரர்கள தயார் படுத்துங்க: ஷாக் கொடுக்கும் இந்திய பௌலர்!"