இங்கிலாந்து அணியிலும் மகேந்திரசிங் தோனிக்கு நிகரான ஒருவர் இருக்கிறார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் ஸ்பின்னர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். .
இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத், மோடேராவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை முதல் துவங்கவுள்ளது. இதற்குமுன் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 எனக் கைப்பற்றிய நிலையில், டி20 தொடரைக் கைப்பற்ற இங்கிலாந்து அணி கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடர் குறித்துப் பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் ஸ்பின்னர் கிரேம் ஸ்வான், எங்கள் அணியில் மகேந்திரசிங் தோனி போல ஒரு வீரர் இருக்கிறார். அவரின் ஆட்டத்தைப் பொறுத்துத்தான் இங்கிலாந்து அணியின் வெற்றி தோல்வி அமையும் என்றார்.
“இந்தியாவுக்கு மகேந்திரசிங் தோனி நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். இவரைப்போல்தான் எங்கள் அணிக் கேப்டன் இயான் மோர்கனும். இங்கிலாந்து அணி நிறைய வெற்றிகளைக் குவிக்க மோர்கன்தான் முக்கியக் காரணம். இத்தொடரில் இவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இங்கிலாந்து அணி நிச்சயம் வெற்றிகளைக் குவிக்கும்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார். ஈயோன் மோர்கன் 2015 உலகக் கோப்பைக்கு சற்று முன்னர் அலெஸ்டர் குக்கிலிருந்து பொறுப்பேற்று அணியை மாற்றினார். இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து டி20 அணி, இதுவரை 54 போட்டிகளில் பங்கேற்று 31 வெற்றிகளைக் குவித்து, ஐசிசியின் டி20 தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மோர்கன் இதுவரை 97 டி20களில் பங்கேற்று 30.37 சராசரியுடன் 2278 ரன்கள் குவித்துள்ளார். மேலும் பேசிய ஸ்வான், ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள இங்கிலாந்து வீரர் டேவின் மாலனின் ஆட்டம் குறித்தும் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
சிஎஸ்கேவில் இளம் ‘யார்க்கர் கிங்’: தோனியின் பக்கா ஸ்கெட்ச்! ! !
“இத்தொடரில் டேவிட் மாலன் சிறப்பாகச் செயல்படுவார் என நம்புகிறேன். ஸ்பின்னர்களுக்கு எதிராகச் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர். ஆஃப் திசையில் அதிரடி காட்டக் கூடியவர். டி20 தொடரைப் பொறுத்தவரை இந்தியா, பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தைத்தான் வடிவமைக்கும். மாலன் ஆட்டத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்ததும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 23ஆம் தேதி முதல் ஆரம்பமாகும். .
Be the first to comment on "இங்கிலாந்து அணியிலும் ஒரு தோனி இருக்காரு பாஸ்: கிரேம் ஸ்வான் பளிச்! !"