அஷ்வின் அபார சதம்… வலுவான முன்னிலையில் இந்தியா!

ashwin 5th century
ashwin 5th century

இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரவிச்சந்திரன் அஷ்வின் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 329/10 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்குச் சுருண்ட நிலையில் இந்திய அணி 270/9 ரன்கள் சேர்த்து, 465 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. தற்போது மூன்றாம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செஷன் நிறைவடைந்துள்ளது.

மூன்றாம் நாள் முதல் செஷன் முடிவில் விராட் கோலி 38 (86), ரவிச்சந்தின் அஸ்வின் 34 (38) களத்தில் இருந்தார்கள். இரண்டாவது செஷனிலும் இவர்களின் அதிரடி தொடர்ந்ததால், இந்திய அணியின் ஸ்கோர் கணிசமாக உயரத் துவங்கியது. இருவரும் அரைசதம் கடந்தார்கள். இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க இங்கிலாந்து பௌலர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், மொயின் அலி சிறப்பாக பந்துவீசி விராட் கோலியை 62 (149) எல்.பி.டபிள்யூ ஆக்கி அசத்தினார். தொடர்ந்து அக்ஷர் படேலையும் மொயின் அலி வெறியேற்றினார். அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்த போதிலும், இந்திய அணியின் முன்னிலை 400 ரன்களைக் கடந்துள்ளது. மைதானம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருப்பதால், இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு மிக மிகக் குறைவு எனக் கருதப்படுகிறது. இருப்பினும் இங்கிலாந்து அணியில் டோமினிக் சிப்லி, ஜோ ரூட் போன்றவர்கள் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் என்பதால், இவர்களின் ஆட்டத்தைப் பொறுத்தே வெற்றி யாருக்கு எனத் தீர்மானிக்கப்படும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

தனி ஆளாகப் போராடி வந்த ’லோக்கல் பாய்’ அஷ்வின் அதிரடி சதம் விளாசியுள்ளார். கடைசி விக்கெட்டுக்கு முகமது சிராஜ் நல்ல ஒத்துழைப்பு தந்ததால் சதம் கடந்து அசத்தினார். மூன்றாம் நாள் ஆட்டத்தின் மூன்றாவது செஷன் நடைபெறுகிறது. இந்திய அணி 450 ரன்கள் வரை முன்னிலை பெற்றுள்ளதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த கடின இலக்கை துரத்தி வரும் இங்கிலாந்து அணியில் துவக்க வீரர்கள் டோமினிக் சிப்லி 3 (25), ரோரி பர்ன்ஸ் 25 (42) ஆகியோர் பெவிலியன் திரும்பியுள்ளார்கள். நைட் வாட்ச்மேன் ஜாக் லீச்சும் முதல் பந்தில் டக்-அவுட் ஆனார். தற்போது டேனியல் லாரன்ஸ் 19* (38), ஜோ ரூட் 2* (8) களத்தில் உள்ளனர். மைதானம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருப்பதால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகமிக குறைவு என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றார்கள்.

Be the first to comment on "அஷ்வின் அபார சதம்… வலுவான முன்னிலையில் இந்தியா!"

Leave a comment

Your email address will not be published.


*