இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஐந்து ஒரு நாள் போட்டித் தொடரில் இரண்டு வெற்றிகளை வைசாக் மற்றும் நகப்பூரில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்திய அணி ஐந்து ஒரு நாள் போட்டித் தொடரில், தொடர் வெற்றியை எதிர்பார்க்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, வெள்ளிக்கிழமையன்று, ராஞ்சியில், JSCA இன்டர்நேஷனல் மைதானத்தில் நடக்க இருக்கிற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. வைசாக் மற்றும் நாக்பூரில் ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் இரண்டுக்கு பூஜ்ஜியம் (2-0) என்ற கணக்கில் முன்னணி வகிக்கிறது. இந்த நெருக்கடியான மோதலுக்கு, இந்திய அணியின் பதினோரு வீரர்களின் விவரங்களை பற்றி நாம் இப்பொழுது பார்ப்போம்.
ரோஹித் ஷர்மா
துணை கேப்டன் ரோஹித் ஷர்மா அவருடைய சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. அவர் விளையாடும் திறனில் இல்லை. தொடக்க ஆட்டக்காரரான இவர் முப்பது ஓட்டங்களுக்கு சற்று கூடுதலாக எடுத்தார். ஆனால் தொடர்ந்து ஆட்டத்தின் நடுவே இவர் போராடுகிறார். மும்பை ஆட்டக்காரரான இவர் நிச்சயமாக போட்டியின் நடுவே விளையாடுவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்வதை எதிர்பார்ப்பார் மற்றும் உலகக் கோப்பைக்கு அப்பால் நீட்டிப்பதற்கும் நிச்சயமாக நம்புவார்.
கே எல் ராகுல்
இவர் இந்திய அணிக்கு முதலாவது இடத்தில் ஆடக்கூடிய ஆதரவான வீரர் ஆவர். இவருக்கு இந்த ஐம்பது ஓவர் விளையாட்டில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர் அணியில் வழக்கமாக முதலாவது இடத்தில ஆடக்கூடிய ஷிகர் தவானுக்குப் பதிலாக சேர்க்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஷிகர் தவான் சரியாக விளையாடாத காரணத்தால் மற்றும் இந்த தொடரில் அவருக்கு நேரம் சரியில்லை என்ற காரணத்தால் கே எல் ராகுல் அணியில் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த இரண்டு T20 போட்டியில் ரோஹித் ஷர்மா சிறந்து விளையாடியதால், இதே மாதிரி இந்த ஒரு நாள் தொடரிலும் சிறப்பாக விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விராத் கோலி
இந்திய அணியின் கேப்டனான இவர் நடந்து முடிந்த நாக்பூர் போட்டியில் இவரது நாற்பதாவது ஒரு நாள் சதத்தை எடுத்தார் மற்றும் இவர் நன்றக ஆடக்கூடிய ஆட்டக்காரர்க திகழ்கிறார். இவர் சில போட்டியில் ஒய்வு எடுத்த பின் அணிக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார். இதன் காரணமாக நாளை ராஞ்சியில் நடைபெற இருக்கிற போட்டியிலும் சிறப்பாக செய்வார் என்று கூறப்படுகிறது. இவர் இந்த போட்டியில் வெற்றி பெறுவதை எதிர் நோக்கி தொடருக்கான வெற்றியை மூன்றவது ஒரு நாள் போட்டியிலேயே பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பட்டி ராயுடு
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது. ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் எடுத்ததன் மூலம் அம்பதி ராயுடு விளையாடுவதில் தீவிரமாக இருக்கிறார். நான்காவது இடத்தில விளையாடும் இவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்னால் மிகச் சிறப்பாக விளையாடுவதற்க்க்கு எதிர் பார்க்கிறார். ஒரு வேளை ராயுடு வரப்போகிற போட்டியில் சரியாக விளையாட வில்லை என்றல் இந்திய அணியின் மேலாண்மை இவருக்குப் பதிலாக வேற ஒரு புதிய விளையாட்டு வீரரை அணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
எம் எஸ் தோனி
விக்கெட் கீப்பர் – பாட்ஸ்மானான இவர் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சரியாக விளையாடவில்லை மற்றும் இவர் முதலாவது பந்திலேயே அவுட் ஆகி (GOLDEN DUCK) மைதானத்தை விட்டு வெளியேறினார். ஆனால், ஸ்டம்புக்கு பின்னல் இவர் நிலையாக விளையாடுகிறார் மற்றும் இரண்டு கேட்ச் பிடித்து வீரர்களை அவுட் ஆக்கினார். நாக்பூரில் இவர் விளையாடிய முறை மிகவும் அரிதானது. மற்றும் இவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்னால் அணியில் மிகச் சிறந்த இடத்தில இருப்பதற்கு தொடர்ந்து முயற்சிப்பார். மேலும் ராஞ்சி இவருடைய சொந்த ஊர் என்பதால் நாளை நடைபெற இருக்கிற போட்டியில் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு நல்ல ஆட்டத்தை ஆடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேதர் ஜாதவ்
ஆல் ரவுண்டர்களான கேதர் ஜாத்வாவும் பேட்டிங் மூலம் தோல்வி அடைந்தார், ஆனால் இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பந்தை நன்றாகச் செய்தார், அங்கு அவர் மிகவும் சிக்கனமான இந்திய பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தார். ஜாதவ் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும், மிகச்சிறந்த பந்து வீச்சாளராகவும் விளங்குகிறார். இது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கு, குறைந்த அளவிலான வடிவங்களில் ஆடுவதற்கு அவரை மிகவும் முக்கியமானதாக ஆக்குகிறது.
விஜய் ஷங்கர்
ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் கடந்த விளையாட்டில் ஒரு நல்ல விளையாட்டுத் திறனை காண்பித்தார். இதே மாதிரி ராஞ்சியில் நடை பெற இருக்கிற போட்டியிலும் சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாகபூர் போட்டியில் கடைசி ஓவரில் இவர் சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணிக்கு மிகப் பிரபலமான வெற்றியை கொடுத்தார். இந்திய அணி நிர்வாகம் இவருக்கு மேலும் மேலும் நிறைய வாய்ப்புகள் தந்து அதாவது பிரிட்டனில் நடை பெற இருக்கிற பல தேசிய நிகழ்வுக்கு முன் இதே மாதிரியாக விளையாடுவதை எதிர் நோக்குகிறது.
ரவீந்திர ஜடேஜா
ஆல் ரௌண்டரான இவர், எப்பொழுதெல்லாம் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு அழைக்கப் படும்பொழுது, சிறப்பாக பந்து வீசி அணிக்கு ஒரு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தருவார். இப்பொழுது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் தொடர் போட்டிகளில் இவர் ஒரு மிகச் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் ஆட்டத்தில் மிகக் குறைந்த ஓட்டங்களையே கொடுப்பவர். இவருடைய திறமையால் எதிரணிக்கு கொடுக்கப்படும் ஓட்டங்கள் மிக கணிசமாகவே இருக்கும். இதுமட்டுமில்லாமல், இவர் பந்தை சிறப்பாக அடித்து விளையாடும் திறனும் இவருக்கு இருக்கிறது.
குல்தீப் யாதவ்
நடந்து முடிந்த இரண்டு ஒரு நாள் போட்டிகளில் ஐந்து விக்கெட்களை கைப்பற்றிய இவர் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக இருந்து கொண்டு இருக்கிறார். முதலாவது ஆட்டத்தில் நாற்பத்தியாறு ஓட்டங்களை கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும், இரண்டாவது ஆட்டத்தில் ஐம்பத்திநான்கு ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.. மற்றும் இவருடைய பந்த்து வீச்சின் திறமையால் எதிரணியின் இணைந்து விளையாடும் வீரர்களின் விக்கெட்டுகளை எடுப்பது இந்திய அணிக்கு ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கும்
புவனேஷ்வர் குமார்
வேகப் பந்து வீச்சாளரான இவர் முகம்மது ஷமிக்கு பதிலாக இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆட இருக்கிற மூன்று ஒரு நாள் போட்டிகளுக்கு புவனேஸ்வர் குமார் பெயர் இடம் பெற்று இருக்கிறது. நாளை ராஞ்சியில் நடை பெற இருக்கிற போட்டிக்கு இவர் திரும்புவார். கொஞ்சம் இடைவெளிக்குப்பிறகு, நாளை நடை பெற இருக்கிற போட்டிக்கு திரும்புவது இவருக்கு மிக ஆவலாக இருக்கிறது.
ஜஸ்பிரிட் பும்ரா
வைசாகில் நடந்த போட்டியில் மிக அதிகமான ஓட்டங்களை எதிரணிக்கு விட்டுக்கொடுத்தார். ஆனால், நாக்பூர் போட்டியில் இருபத்திஒன்பது ஓட்டங்களை மட்டும் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலகத்தில், அதாவது ஐசிசி தர பட்டியலில் முதலாவது பந்து வீச்சாளரான இவர் நாளை நடை பெற இருக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் சிறப்பாக செய்ய முடியும் என்று எதிர்பார்க்கிறார்.
Be the first to comment on "IND VS AUS: மூன்றவது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் நடக்கிறது. அணியில் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது."