ஐபிஎல் 13ஆவது சீசனின் 55ஆவது லீக் போட்டியில் ஷிகர் தவன், அஜிங்கிய ரஹானே இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்ததால் டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
டெல்லி அணி: ஷிகர் தவான், பிருத்வி ஷா, அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் , ரிஷாப் பந்த், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேனியல் சாம்ஸ், ஆக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே
பெங்களூரு அணி: ஓஷ் பிலிப், தேவதூத் பாடிக்கல், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், சிவம் டூப், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, கிறிஸ் மோரிஸ், இசுரு உதனா, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்
அபுதாபியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரன்களை குவிக்கத் திணறியது.
ஜோஸ் பிலிப் 12 ரன்களும், கேப்டன் விராட் கோலி 29 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 41 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து நோர்க்கியா பந்தில் போல்ட் ஆனார்,
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஏபி டிவிலியர்ஸ் 21 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறினர்.
ஷிவம் துபே 17 ரன்கள் எடுத்தார். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 152 ரன்கள் எடுத்தது. ஆன்ரிக் நோர்க்கியா 3 விக்கெட்களையும்,, காகிசோ ரபடா 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர்.
153 ரன்கள் இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி, மூத்த வீரர்கள் சிறப்பான செயல்பாடுகளால் வெற்றிக்கனியைத் தட்டிப் பறித்தது.
பிரித்வி ஷா வழக்கம்போல் ஒற்றை இலக்க ரன்களுக்கு நடையைக் கட்டினார். அடுத்து ஷிகர் தவன், அஜிங்கிய ரஹானே பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர்.
தவன் 54 ரன்களும், ரஹானே 60 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஷ்ரேயஸ் ஐயர் நிலைத்து நின்று விளையாட தவறி 7 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் ரிஷப் பந்த் (8), மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் (10) இருவரும் அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்துச் சென்றனர். இறுதியில் டெல்லி அணி 19 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
Be the first to comment on "RCB vs DC: ஷிகர் தவன், ரஹானே அதிரடி…டெல்லி அணி மெர்சல் வெற்றி!"