ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் ட்ரீம் 11 இந்தியன் பிரீமியர் லீக் 2020 க்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாக சபை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இந்த சீசன் செப்டம்பர் 19 ஆம் தேதி அபுதாபியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே பிளாக்பஸ்டர் மோதலுடன் கிக்ஸ்டார்ட் தொடங்கும்.
ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிகாரப்பூர்வ ஐபிஎல் அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். துபாயில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.
வீரர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு விதிமுறைகளை வகுக்கத் தாமதமானதால்தான் அட்டவணை வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. போட்டிகள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்கூட்டியே தொடங்க உள்ளது. மாலையில் தொடங்க உள்ள போட்டிகள் 3:30 மணிக்கும், இரவு நேரப் போட்டிகள் 7:30 மணிக்கு தொடங்கும். மொத்தம் 6 போட்டிகள் மட்டுமே மதிய வேளைகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
தற்போது, வெளியிடப்பட்டுள்ள ஐபிஎல் அட்டவணைப்படி, அனைத்து அணிகளும் தலா 14 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. சென்னை அணி முதல் போட்டியில் மும்பை அணியையும், கடைசிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் எதிர்கொண்டு விளையாட உள்ளது. ஐபிஎல் கடைசி லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.
செப்டம்பர் 19 முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை லீக் சுற்றுகள் நடைபெற உள்ளது. அதன்பின்னர், நவம்பர் 5ஆம் தேதி முதல் தகுதி சுற்றும், 6ஆம் தேதி எலிமினேசன் சுற்றும், 8ஆம் தேதி இரண்டாவது தகுதி சுற்றும் நடைபெற உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இறுதிப் போட்டி ஞாயிற்றுக் கிழமைக்குப் பதில் செவ்வாய்க் கிழமை (நவம்பர் 10) நடைபெற உள்ளது.
சென்னை அணியில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்று சந்தேகங்கள் எழுந்தது. சந்தேகத்திற்கு வலுவூட்டும் வகையில் அட்டவணை வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அனைவரும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளதால், இனி ஐபிஎல் தொடரை யார் நினைத்தாலும் தடுக்கமுடியாது என்று ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
Be the first to comment on "ஐபிஎல் அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ: முதல் போட்டி சென்னை அணிக்கு!"