ஆல்-ரவுண்டர் தரவரிசை: பென் ஸ்டோக்ஸ் முதலிடம்!

இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், டெஸ்ட் போட்டிக்கான ஆல்-ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். பேட்ஸ்மென்களுக்கான தரவரிசையிலும் 3-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

மான்செஸ்டரில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 254 ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச்சென்றார். இப்போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட்

தரவரிசை பட்டியலில் 6 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

மொத்தம் 497 புள்ளிகள் பெற்ற பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தைக் கைப்பற்றினார். பேட்ஸ்மென்களுக்கான தரைவரிசைப் பட்டியிலில் 6 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 827 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் ஸ்டோக்ஸ். இதே போட்டியில் முதல் இன்னிங்ஸில் 120 ரன்கள் விளாசிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டோமினிக் சிப்லி 29 இடங்கள் முன்னேறி 35ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 886 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தை தக்கவைத்துள்ளார்.

ஆல்-ரவுண்டர் தரவரிசையில் பென் ஸ்டோக்ஸ் முதல்முறையாக 497 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2006ஆம் ஆண்டு ஆன்ட்ரூ பிளிண்டாப்புக்கு பிறகு இங்கிலாந்து அணி வீரர் ஒருவர் முதலிடம் பிடித்திருப்பது இதுவே முதல் முறை. கடந்த ஒன்றரை வருடங்களாக முதலிடத்தில் நீடித்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 2ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்களை கைப்பற்றிய இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 4 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை பிடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் ஹோல்டர் 2ஆவது இடத்தில் இருந்து 3ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளார். இந்திய அணியின் வேகப்ந்து வீச்சாளர் ஜாஸ்பிரீத் பும்ரா 7ஆவது இடத்தில் உள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியை வெற்றி கண்டது மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்து அணி 40 புள்ளிகள் அதிகம் பெற்று நியூசிலாந்து அணியை பின்னுக்குத் தள்ளி 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 7ஆவது இடத்தில் உள்ளது.

Be the first to comment on "ஆல்-ரவுண்டர் தரவரிசை: பென் ஸ்டோக்ஸ் முதலிடம்!"

Leave a comment

Your email address will not be published.


*