இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்குமாறு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
இந்திய அணி வீரர் ரோகித் ஷர்மாவிற்கு 2020 ஆண்டிற்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதையும் இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு அர்ஜீனா விருதையும், பெண்கள் கிரிக்கெட்டில் தீப்தி சர்மா பெயரை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது என இந்திய இளைஞர்கள் விளையாட்டு விவகாரங்களுக்கான அமைச்சகத்திற்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையானது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான வீரர்களின் விளையாட்டுத் திறனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர் ரோகித் சர்மா டி20 தொடர்களில் 4 சதங்கள் அடித்த
முதல் வீரராவார். கடந்த ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை
தொடரில் ரோஹித் சர்மா 5 சதம் அடித்து அசத்தினார். மேலும் அதிக
ரன்கள் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மா,
கடந்தாண்டில் ஐசிசியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக தேர்வு
செய்யப்பட்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதம் விளாசிய
ஒரே வீரர் ரோஹித் தான். அதில் 8 போட்டிகளில் 150 மேலாக ரன்களை
குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில்
அதிக சதங்கள் அடித்த வீரராக அறியப்படுகிறார். மேலும் ஒரு நாள்
போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 28
சதங்கள் அடித்ததின் அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளார். அதே போல கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து ஐந்து சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். அதேபோல இஷாந்த் சர்மாவும் ஆசியாவுக்கு வெளியே அதிகவிக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.
ரோகித் சர்மாவிற்கு கேல் ரத்னா விருதைப் பரிந்துரைத்ததையடுத்து
பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி “ ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக
புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். நினைத்துப் பார்க்க முடியாத
நெருக்கடியான சூழ்நிலைகளில், குறுகிய நேரத்தில் அதிக ரன்களை
குவித்துள்ளார். அவரது அர்ப்பணிப்புக்கும், விடாமுயற்சிக்கும்,
தலைமைப் பண்புக்கும் கேல் ரத்னா விருது மிகப் பொருத்தமானது என
நாங்கள் நினைக்கிறோம் என அவர் கூறினார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கேல்ரத்னா விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "ரோகித் சர்மாவிற்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது – பிசிசிஐ பரிந்துரை"