Shahid Afridi:இப்போது இருந்து ஒட்டும் இல்ல உறவும் இல்ல.அப்ரிடியின் காஷ்மீர் கருத்தால் வெடித்த பூகம்பம்!

பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடியின் காஷ்மீர் கருத்தால் இனி எப்போதும் அவருடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

 இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியின் அறக்கட்டளைக்கு உதவி செய்தனர்.இதற்கிடையில் அப்ரிடி காஷ்மீர் தொடர்பாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

இதுகுறித்து ஹர்பஜன் கூறுகையில், “இந்தியா குறித்தும், நம் பிரதமர் குறித்தும் ஷாகித் அப்ரிடி பேசியது வருத்தம் அளிக்கிறது. அதோடு அதை சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்ரிடி தனது அறக்கட்டளைக்காக உதவும் படி கேட்டுக்கொண்டார். மனிதாபிமன அடிப்படையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தவிப்பவர்களுக்காக தான் நாங்கள் உதவினோம்.

நம் பிரதமர் கூட எல்லைகள், மதங்கள், சாதியை கடந்து கொரோனா வைரஸை எதிர்த்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்காக தான் நாங்கள் அவருக்கு உதவினோம். ஆனால் அந்த மனிதர் தற்போது நாட்டுக்கு எதிராக பேசியுள்ளார். இனி அவருடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை. நம் நாட்டைப்பற்றி அவதூராக பேச அவருக்கு எந்த ரைட்ஸும் இல்லை. அவர் அவரின் நாட்டின் தங்கி அவரின் எல்லை எதுவரை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நான் இங்கேதான் பிறந்தேன், இங்கே தான் இறாப்பேன். நான் என் தாய் நாட்டுக்காக சுமார் 20 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். என் நாட்டுக்கு எதிராக நான் எதாவது செய்தேன் என் யாரும் சொல்ல முடியாது. இன்று அல்லது நாளை என் நாட்டுக்கு நான் எப்போது தேவைப்பட்டாலும், எல்லையை பாதுக்காவும் தேவைப்பட்டாலும் துப்பாக்கி ஏந்தி முதல் ஆளாக நான் நிற்பேன்.

ஹர்பஜன் சிங் போல காம்பீரும், அப்ரிடியின் கருத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக காம்பீர் வெளியிட்டுள்ளபதிவில், “பாக்கில் 7 லட்சம் படையினர் 20 கோடி மக்கள் துணையுடன் உள்ளதாக 16 வயது அப்ரிடி கூறுகிறார். அப்படியிருந்தும், காஷ்மீருக்காக சுமார் 70 ஆண்டுகள் பிச்சை எடுத்துக்கொண்டுள்ளது. அப்ரிடி, இம்ரான், பாஜ்வா போன்ற ஜோக்கர்கள் பாகிஸ்தான் மக்களை முட்டளாக்க, இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடி ஜீக்கு எதிராகவும் மீண்டும் மீண்டும் விஷத்தை பரப்பலாம். ஆனால் தீர்ப்பு நாள் வரை காஷ்மீரை பெறப்போவதில்லை. வங்கதேசம் நினைவிருக்கிறதா?” என பதிவிட்டுள்ளார்.

Be the first to comment on "Shahid Afridi:இப்போது இருந்து ஒட்டும் இல்ல உறவும் இல்ல.அப்ரிடியின் காஷ்மீர் கருத்தால் வெடித்த பூகம்பம்!"

Leave a comment

Your email address will not be published.


*